Home /News /tamil-nadu /

செஸ் ஒலிம்பியாடை அடுத்து காத்தாடி திருவிழா... களைக்கட்டும் மாமல்லபுரம்

செஸ் ஒலிம்பியாடை அடுத்து காத்தாடி திருவிழா... களைக்கட்டும் மாமல்லபுரம்

மாதிரி படம்

மாதிரி படம்

இந்த காத்தாடி திருவிழாவைத் காண குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது. பெரியவர்கள் 150 ரூபாய் செலுத்தி நுழைவுச் சீட்டு பெற்று கண்டு ரசிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 India
  • 1 minute read
  • Last Updated :
    மாமல்லபுரத்தில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு சர்வதேச காத்தாடி திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    நாட்டின் 75-வது சுதந்திர தினம், வரும் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது.   இதை முன்னிட்டு முதல் முறையாக சர்வதேச காத்தாடி திருவிழா மாமல்லபுரத்தில் நாளை தொடங்க உள்ளது. வரும் 15-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் பங்கேற்பதற்காக தாய்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 10 அணிகள் வந்துள்ளன.

    பட்டம் பறக்க விடுதலில் கைதேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு காத்தாடிகளை பறக்கவிட உள்ளனர்.  இதற்காக மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஓஷன் வியூ பகுதியில் ஜேசிபி இயந்திரம் மூலம் இடத்தை சமன்படுத்தி பாதை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த காத்தாடி திருவிழாவைத் காண குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது. பெரியவர்கள் 150 ரூபாய் செலுத்தி நுழைவுச் சீட்டு பெற்று கண்டு ரசிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Raj Kumar
    First published:

    Tags: International, Mamallapuram

    அடுத்த செய்தி