சமையலறை வாஷ் பேசினை பொது கழிப்பறையில் பொருத்திய பேரூராட்சி நிர்வாகம்..!
சமையலறை வாஷ் பேசினை பொது கழிப்பறையில் பொருத்திய பேரூராட்சி நிர்வாகம்..!
வாஷ் பேசினை பொது கழிப்பறையில் பொருத்திய பேரூராட்சி நிர்வாகம்
ஆண்கள் கழிப்பறையில் சிறுநீர் கழிக்க பீங்கான் வைக்காமல் வீட்டிற்கு சமையலறையில் பயன்படுத்தப்படும் வாஷ்பேஷன் வைத்திருந்ததால்பொதுமக்கள், பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
வீட்டில் சமையலறையில் பயன்படுத்தப்படும் வாஷ் பேசினை பொது கழிப்பறையில் பொருத்திய கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி நிர்வாகம், புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து சிறுநீர் கழிப்பு பீங்கான் மாற்றி அமைத்தனர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம் பேருந்து நிலையம் கரூர் - திருச்சி முக்கிய சந்திப்பாக இருந்து வருகிறது. மேலும் ரயில் நிலையமும் அருகில் உள்ளது. இந்நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கரூர், திருச்சிக்கு வேலை நிமித்தமாகவும், மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் என இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வந்தனர்.
பேருந்து நிலையத்தில் சிறுநீர் கழிப்பதற்கு கூட வழியில்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்த நிலையில், நீண்டநாள் கோரிக்கையாக கழிப்பறை வசதி கட்டித்தரக் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி நிர்வாகம் அவசரகதியில் பெண்கள், ஆண்கள் என தற்காலிக கழிப்பறை வசதியை ஏற்படுத்திக் கொடுத்தனர். ஆண்கள் கழிப்பறையில் சிறுநீர் கழிக்க பீங்கான் வைக்காமல் வீட்டிற்கு சமையலறையில் பயன்படுத்தப்படும் வாஷ்பேஷன் வைத்திருந்ததால்பொதுமக்கள், பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
வாஸ்பேஷன் சிறுநீர் கழிப்பு புகைப்படத்தை இளைஞர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தனர். அந்த பதிவு சமூக வலைதளங்களில் பரவியது. உடனடியாக கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி நிர்வாகம் அந்த வாஷ் பேசினை அகற்றிவிட்டு கழிவறையில் சிறுநீர் கழிப்பதற்கு சிறிய பீங்கானை பொருத்தியுள்ளனர்.
-செய்தியாளர்: கார்த்திகேயன்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.