ஆட்சியைக் கலைக்க கிரண்பேடி முயற்சிக்கிறார் - புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் குற்றச்சாட்டு

புதுச்சேரியில் நடைபெறும் காங்கிரஸ் ஆட்சியைக் கலைக்க துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முயற்சி செய்கிறார் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆட்சியைக் கலைக்க கிரண்பேடி முயற்சிக்கிறார் - புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் குற்றச்சாட்டு
சுகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்
  • Share this:
புதுச்சேரியில் கோவிட் கட்டுபாட்டு மையத்தில் நேற்று ஆய்வு செய்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அங்கிருந்த மருத்துவ அதிகாரிகளை கடுமையாக சாடினார். இந்த  நடவடிக்கையை சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கண்டித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மல்லாடி கிருஷ்ணாராவ், ‘நாளை பட்ஜெட் தாக்கல் செய்வதால் நேற்று மதியம் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதுகுறித்து  சுகாதார துறை அதிகாரிகளை தனது அலுவலகத்தில் இருக்க செய்தேன். அப்போது சுகாதார துறையின் கோவிட் கட்டுபாட்டு மைய அலுவலகம் சென்று மருத்துவர்களை கிரண்பேடி குற்றவாளிகளை போல் மிரட்டியுள்ளார். அவரது நடவடிக்கையால் மருத்துவர்களும் சுகாதார துறையினரும் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டனர். ஸ்டிரைக்கிற்கு தயாராகி விட்டனர்.

நமக்கு மக்கள் தான் முக்கியம். கிரண்பேடி முக்கியமில்லை. அவர் நாளை சென்று விடுவார் என கூறி அவர்களை சமாதானப்படுத்தி இருக்கிறேன். கொரோனாவில் போராடும் சுகாதாரத் துறையினரை கிரண்பேடி அவலமானப்படுத்திவிட்டார். அவருக்காக நான் மன்னிபபு கேட்கிறேன். புதுச்சேரியில் நடைபெறும் காங்கிரஸ் ஆட்சியைக் கலைக்க கிரண்பேடி முயற்சிக்கிறார். பட்ஜெட்டை தடுக்க முயற்சித்தார். இது நடக்கவில்லை என்பதால் கிரண்பேடி கோபமாகி விட்டார். 21 நாட்களாய் பட்ஜெட்டை கோப்பை தாமதப்படுத்தினார்.


பட்ஜெட்டிற்கு 4 நிபந்தனைகளை கிரண்பேடி விதித்துள்ளார். இதை அமல்படுத்தினால் புதுச்சேரி நிலை என்னவாகும் என முதல்வர் மக்களிடம் தெரிவிப்பார். ஏனாம் மண்டல நிர்வாக அதிகாரியை கொரோனா பணியை செய்யவிடாமல் கலால் துறை பணியை பார்க்க கிரண்பேடி உத்தரவிட்டார். இதனால் 25 நாட்களாய் அவர் கொரோனா பணி ஆற்றவில்லை. இதனால் ஏனாமில் நோய் தொற்று அதிகமாகி விட்டது. இதே போல் புதுச்சேரியிலும் மருத்துவர்களை பணி செய்யவிடாமல் தடுத்து நோயை அதிகரிக்க கிரண்பேடி முயற்சிக்கிறார். புதுச்சேரி அரசு கோவிட் மருத்துவமனையில் குறைந்த படுக்கை இருப்பதால் ஜிப்மருக்கு மாற்ற அரசு முயற்சித்தால் கிரண்பேடி தடுக்கிறார். அவருக்கு உண்மையில் அக்கறை இருந்தால் ஆளுநர் மாளிகையில் ஒரு பகுதியை கோவிட் நோயாளிகளுக்கு அளிப்பாரா?’ என்றும் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
First published: July 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading