நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தனி தொகுதி பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரு.வேத.முகுந்தன் அவர்கள் மாற்றப்படுவதாகவும், அவருக்கு பதிலாக வடிவேல் இராவணன் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத தொடர்பாக பாமக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் வரும் 06.04.2021 அன்று நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், நாகப்பட்டினம் மாவட்டம் 164. கீழ்வேளூர் (தனி) தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரு.வேத.முகுந்தன் அவர்கள் மாற்றப்படுகிறார்.
அவருக்குப் பதிலாக கட்சியின் பொதுச் செயலாளர் திரு.வடிவேல் இராவணன் பாமக வேட்பாளராக போட்டியிடுவார் என்பதை பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா (ராமதாஸ்), இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் தெரிவிக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Must Read : கமல்ஹாசன் கட்சி பொருளாளர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை ரெய்டு - ரூ.8 கோடி பறிமுதல்
தமிழக சட்டமன்ற தேர்தல் களம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக 23 சட்டமன்ற தொகுதிகளில் களம் காண்கின்றது. அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது என்பது குறிப்டத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.