தமிழ்நாட்டில் 20 சதவீதம் பேருக்கு சிறுநீரக கோளாறு - அரசு ஆய்வில் தகவல்
தமிழ்நாட்டில் 20 சதவீதம் பேருக்கு சிறுநீரக கோளாறு - அரசு ஆய்வில் தகவல்
சிறுநீரக கோளாறு
Kidney Disease | முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அதிகம் பயன்படுத்தப்பட்டிருப்பது டயாலிசிஸ் தேவைக்காக என்றும் பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் தெரிவிக்கிறது.
தமிழ்நாட்டில் 20 சதவிகிதம் பேருக்கு சிறுநீரக கோளாறு இருப்பதாக அரசு ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் இந்த ஆய்வை சென்னை மருத்துவக் கல்லூரியின் சிறுநீரகவியல் துறை மற்றும் சமூக மருத்துவம் துறையின் உதவியுடன் நடத்தியது. தேசிய சுகாதார திட்டம் இதற்கான நிதியை வழங்கியது. பிப்ரவரி மாநிலம் முழுவதும் 177 பகுதிகளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் 92 ஆய்வுக் குழுக்கள் சிறுநீரக கோளாறுகள் குறித்த ஆய்வை நடத்தின.
இந்த ஆய்வில் 4741 பேர் பங்கேற்றனர். இதில் 455 பேருக்கு அதாவது 9.5% பேருக்கு ரத்தத்தில் க்ரியாடினின் creatinine அளவு அதிகம் இருந்தது. மேலும் 276 பேருக்கு அதாவது 5.8 சதவீதம் பேருக்கு ஆல்புமின் அளவு அதிகமாக இருந்தது. இது தவிர 367 பேருக்கு அதாவது 7.7 சதவீதம்பேருக்கு சிறுநீரில் ரத்தம் கண்டறியப்பட்டது. மொத்தம் 934 பேருக்கு அதாவது 19.7 சதவீதம் பேருக்கு அல்லது 5ல் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பது தெரியவந்துள்ளது.
சிறுநீரக கோளாறுகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க இந்த ஆய்வு வலியுறுத்துவதாக பொது சுகாதாரத்துறை இயக்குரகம் தெரிவித்துள்ளது. தொற்றா நோய்களில் சிறுநீரக கோளாறுகள் காரணமாக அதிக உயிரிழப்புகள் நடைபெறுவதாகவும் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அதிகம் பயன்படுத்தப்பட்டிருப்பது டயாலிசிஸ் தேவைக்காக என்றும் பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் தெரிவிக்கிறது.
எனினும் மாநிலத்தில் சிறுநீரக கோளாறுகள் எவ்வளவு உள்ளன என்பது குறித்த தரவுகள் அரசிடம் இல்லை என்பதால் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சிறுநீரக கோளாறுகள் இருப்பதாக கண்டறியப்பட்டவர்களுக்கு மீண்டும் மூன்று மாதங்கள் கழித்து பரிசோதனைகள் செய்யப்பட்டு அப்போதும் கோளாறு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறு கொண்டவர்களாக கருதப்படுவார்கள்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.