Home /News /tamil-nadu /

மதுரையிலிருந்து நாகர்கோவிலுக்கு மின்னல் வேகத்தில் கொண்டு வரப்பட்ட சிறுநீரகம்

மதுரையிலிருந்து நாகர்கோவிலுக்கு மின்னல் வேகத்தில் கொண்டு வரப்பட்ட சிறுநீரகம்

நாகர்கோவிலில் பயன்பட்ட ஆம்புலன்ஸ்.

நாகர்கோவிலில் பயன்பட்ட ஆம்புலன்ஸ்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக மூன்று மணி நேரத்தில் மதுரையிலிருந்து நாகர்கோவிலுக்கு சிறுநீரகம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    மதுரையைச் சேர்ந்த வேல்முருகன் (27) என்பவர் விபத்து ஒன்றில் உயிரிழந்தார். அவரது சிறுநீரகத்தை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வெங்கடேஷ் (43) என்பவருக்கு இந்த சிறுநீரகத்தைப் பொருத்த திட்டமிடப்பட்டது.

    அதற்காக மதுரையிலிருந்து நாகர்கோவிலுக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிறுநீரகம் கொண்டுவரப்பட்டது. வழிநெடுகிலும் உள்ள போக்குவரத்து நெருக்கடிகளை சமாளிக்க 50-க்கும் மேற்பட்ட பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். தொடர்ந்து நாகர்கோவில் மாநகரில் உள்ள குறுகலான சாலையில் ஆம்புலன்ஸ் வேகமாக வர முடியாது என்பதால் ஆம்புலன்ஸில் இருந்த சிறுநீரகம் கார் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டது. பின்னர் அது வெங்கடேஷுக்கு பொருத்தபட்டது.



    இந்த சிறுநீரகம் மதுரையிலிருந்து மூன்றரை மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் மூலமாக மின்னல் வேகத்தில் கொண்டு வந்த ஓட்டுநரை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
    Published by:Rizwan
    First published:

    Tags: Kidney

    அடுத்த செய்தி