ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தொழிலதிபரைக் கடத்தி சித்ரவதை - இந்து மகா சபா தலைவர் ஜாமீன் மனு தள்ளுபடி

தொழிலதிபரைக் கடத்தி சித்ரவதை - இந்து மகா சபா தலைவர் ஜாமீன் மனு தள்ளுபடி

ஸ்ரீகண்டன்

ஸ்ரீகண்டன்

இந்து மகா சபா என்பது ஒரு காலத்தில் தேவாரம் மற்றும் திருவாசகம் பாடுவதற்காக அமைக்கபட்டதாக இருந்தது இப்போது அப்படியில்லை என நீதிபதி வேதனை தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தொழிலதிபர் ராஜேஷை சிறை பிடித்து சித்தரவதை செய்து சொத்துக்களை எழுதி வாங்கிய வழக்கில் இந்து மகா சபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீகண்டன் தாக்கல் செய்த ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் என்பவரை சிறை பிடித்து சித்ரவதை செய்ததோடு, அவரின் பெயரிலிருந்த சொத்துகளை எழுதி வாங்கியதாக, திருமங்கலம் காவல் உதவி ஆணையர், காவல் ஆய்வாளர், உதவி காவல் ஆய்வாளர் உட்பட 10 பேர் மீது 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர்.

இதில், சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த இந்து மகா சபா தலைவர் ஸ்ரீகண்டன் என்பவரின் உத்தரவின் பேரில்தான் ராஜேஷை அடைத்துவைத்துக் கொடுமைப்படுத்தி காவலர்கள் சொத்துகளை எழுதி வாங்கியது தெரியவந்தது. இது தொடர்பான வழக்கில், கோடம்பாக்கம் ஸ்ரீ, சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.சிறையில் அடைக்கப்பட்ட அவர், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஸ்ரீ மீது ஏற்கெனவே 4 வழக்குகள் உள்ளதால் அவருக்கு ஜாமின் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.இதை ஏற்று ஸ்ரீ ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, இந்து மகா சபா என்பது ஒரு காலத்தில் தேவாரம் மற்றும் திருவாசகம் போன்ற பாசுரங்களை பாடுவதற்காக அமைக்கபட்டதாக இருந்தது எனவும், தற்போது இந்து மகா சபாக்கள் விநாயகர் சதுர்த்திக்கு பணம் வசூல் செய்வதற்காகவே உள்ளது எனவும் வேதனை தெரிவித்தார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Chennai High court, Crime News, Fraud