ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ரூ.60 லட்சம் கேட்டு மூன்றரை வயது சிறுமியை காதலனுடன் சேர்ந்து கடத்திய பணிப்பெண்... 6 மணி நேரத்தில் மீட்ட போலீசார்...!

ரூ.60 லட்சம் கேட்டு மூன்றரை வயது சிறுமியை காதலனுடன் சேர்ந்து கடத்திய பணிப்பெண்... 6 மணி நேரத்தில் மீட்ட போலீசார்...!

அண்ணாநகர் போலீஸ் ஸ்டேஷன்

அண்ணாநகர் போலீஸ் ஸ்டேஷன்

6 மணிநேரத்துக்குள் சிறுமியை மீட்ட போலீஸார், பெற்றோரிடம் ஒப்படைத்தனர். தனிப்படையின் நடவடிக்கையை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், நேரடியாக கண்காணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

சென்னையில் மூன்றரை வயது சிறுமியை கடத்தி 60 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய வீட்டு பணிப்பெண்ணையும், அவரது காதலரையும் போலீசார் 6 மணிநேரத்தில் கைது செய்தனர்.

சென்னை ஷெனாய் நகரைச் சேர்ந்த மருத்துவர்கள் அருண்ராஜ், நந்தினி தம்பதியின் மகள் அன்விகா முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படிக்கிறார். பள்ளி முடிந்து வேனில் வந்த சிறுமியை அழைத்து வர, தெரு முனைக்குச் சென்ற பணிப்பெண் அம்பிகா என்பவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

சிறுமியை காணாமல் தேடிய பெற்றோருக்கு, பணிப்பெண்ணின் செல்போனில் இருந்து அழைப்பு வந்தது. அப்போது, தன்னையும், குழந்தையையும் யாரோ கடத்திவிட்டனர் என்று அம்பிகா கூறியவுடன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

சிறிதுநேரம் கழித்து மீண்டும் தொடர்பு கொண்ட நபர், சிறுமியை கடத்திவிட்டதாகவும், 60 லட்ச ரூபாய் வேண்டும் என்றும் கூறி மிரட்டியுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டது. சிறுமியின் தாய் நந்தினியை மீண்டும் தொடர்புகொண்ட நபர், பணம் தயாராகிவிட்டதா என்று கேட்டுள்ளார்.

இதையடுத்து, செல்போன் சிக்னலை வைத்து, செங்குன்றத்திலிருந்து பேசியதைக் கண்டறிந்த போலீஸார், அங்கு சென்று வெளிநாட்டு சிக்கன் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றும் முகமது கலிமுல்லா சேக் என்பவரை கைது செய்தனர்.

அம்பிகாவின் காதலரான முகம்மது, மேலும் இருவருடன் இணைந்து சிறுமியை கடத்தியதை ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, கோவளத்தில் உள்ள லாட்ஜில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுமியை போலீஸார் மீட்டனர். அம்பிகாவையும் கைதுசெய்தனர்.

இதில் மீதமுள்ள 2 பேர் தப்பியோடிவிட்டனர். 6 மணிநேரத்துக்குள் சிறுமியை மீட்ட போலீஸார், பெற்றோரிடம் ஒப்படைத்தனர். தனிப்படையின் நடவடிக்கையை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், நேரடியாக கண்காணித்தார்.

மேலும் படிக்க... கரூரில் வரதட்சணை கொடுமை - மனைவி துாக்கிட்டுத் தற்கொலை: பின்னணி என்ன?


அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.</

Published by:Vaijayanthi S
First published:

Tags: Baby kidnaped, Crime | குற்றச் செய்திகள்