டெல்லியில் முகாமிட்டு மத்திய அமைச்சர்களை சந்திக்கும் குஷ்பு - கட்சி பதவி வழங்கப்படுமா?

குஷ்பு - நிர்மலா சீதாரான்

இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான். எல்.முருகனுக்கு அமைச்சர் பதவி கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி.

 • Share this:
  குஷ்பு தொடர்ந்து டெல்லியிலேயே முகாமிட்டு மத்திய அமைச்சர்களை சந்தித்து வருவதால் அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜகவின் நட்சத்திர வேட்பாளராக களம் இறக்கப்பட்ட குஷ்பு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

  பாஜகவில் சேர்ந்த நடிகை குஷ்பு கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் நட்சத்திர வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். அவர் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் அவருக்கு பொறுப்புகள் வழங்கப்படலாம் என்று சொல்லப்பட்டது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில், சமீபத்தில் டெல்லி சென்றுள்ள குஷ்பு கடந்த இரண்டு நாட்களாக அங்கேயே முகாமிட்டுள்ளார். புதிதாக அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட எல்.முருகன், கி‌ஷன்ரெட்டி ஆகியோரை சந்தித்து வாழ்த்து கூறினார். மேலும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி ஆகியோரையும் சந்தித்துப் பேசினார்.

  இது குறித்து குஷ்பு கூறுகையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்றும் மாநிலத் தலைவராக இருந்த எல்.முருகன் தலைமையில்தான் கட்சிக்கு வந்தேன். அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி என்று கூறினார்.

  அத்துடன், கி‌ஷன்ரெட்டி தனக்கு தேர்தலில் பிரசாரம் செய்து பணியாற்றியவர் என்றும் அவருக்கும் அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. எனவே மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து சொல்லவே டெல்லி சென்றேன். வேறு எந்த விசே‌ஷமும் இல்லை என்று கூறினார். எனினும், குஷ்பு தொடர்ந்து டெல்லியிலேயே முகாமிட்டுள்ளார்.

  Must Read : சென்னையில் தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கை : சோதனைகளை கடுமையாக்க மாநகராட்சி முடிவு

  தமிழக பாஜக தலைவராக இருந்த எல். முருகனுக்கு மத்திய மீன்வளத்துறை, விலங்குகள் நலத்துறை மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறையின் இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழக பாஜகவின் துணைத் தலைவராக இருந்த அண்ணாமலை, தமிழக பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். விரைவில் அவர் தமிழ்நாடு பாஜக தலைவராக பதவியேற்க உள்ளார்.

  இந்நிலையில், டெல்லி சென்று முகாமிட்டுள்ள குஷ்புவிற்கு கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
  Published by:Suresh V
  First published: