குஷ்பு தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக காணப்படுகிறார். இந்த எடை குறைப்பால் அவரது தோற்றத்துடன் வயதும் கணிசமாக குறைந்து காணப்படுகிறது.
எப்படி அவர் தனது எடையை குறைத்தார்? ரசிகர்களும், திரையுலகினரும் இந்த கேள்வியை கேட்டு வந்த நிலையில், அந்த ரகசியத்தை உடைத்துள்ளார் குஷ்பு.
நடிகைகளில் சற்று பூசிய உடல்வாகுடன் இருப்பவர்களை சின்ன குஷ்பு என்று அழைப்பு வழக்கம். கடைசியாக அந்தப் பெயரை பெற்றவர் ஹன்சிகா. ஆரம்பத்தில் பூசிய உடல்வாகுடன் இருந்த ஹன்சிகா இப்போது மெலிந்த சிம்ரனாகிவிட்டது தனிக்கதை. குஷ்பு என்றால் பூசிய உடல்வாகு என்பது தமிழர்கள் மனதில் பதிந்து போன சித்திரம். அந்த மனச்சித்திரத்துக்கு என்றும் குஷ்பு பங்கம் விளைவித்ததில்லை.
சினிமாவில் எப்போதாவது தலைகாட்டிவரும் குஷ்பு இரண்டு கட்சிகள் தாவி இப்போது பாஜக இல் அடைக்கலமாகியுள்ளார். தீவிர கட்சிப்பணியில் ஈடுபடுகிறார். இதனால், உடல்பருமனும் ஏறியது. 51 வயதுக்கு மேல் ஒருவரது உடல் எடையை யார் கவனிக்கப் போகிறார்கள்? குஷ்புவின் உடல் பருமனையும் யாரும் கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில் உடல் எடையை கணிசமாக குறைத்து 30 வயது தோற்றத்துடன் குஷ்பு தனது புகைப்படங்களை வெளியிட தமிழகம் ஷாக்காகிப் போனது. மற்றவர்களைவிட குஷ்புதான் இந்தத் தோற்றத்தால் அதிகம் அதிர்ச்சிக்குள்ளானவர். நாமா இப்படி ஸ்லிம்மானோம் என்ற பிரமிப்பு மாறாமல் காலை எழுந்ததும் செல்பி எடுத்து இன்ஸ்டாகிராமில் போடுகிறார். இந்த செல்பிகளே இரண்டு டஜனுக்கும் மேலிருக்கும்.
சாதாரண நபர்கள் உடல் இளைத்தாலே, எப்படி இதை சாதிச்சீங்க? என்று காரணம் கேட்கும் உலகம் குஷ்புவை விட்டுவிடுமா? அவரிடமும் கேட்டார்கள். நடைபயிற்சிதான் உடல் இளைக்க காரணம் என்று தற்போது ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார் குஷ்பு. டயட் உள்பட பல விஷயங்களை எதிர்பார்த்த உடல் இளைப்பாளர்களுக்கு குஷ்புவின் இந்த டூ மினிட்ஸ் நூடுல்ஸ் பதில் திருப்தியில்லைதான்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.