ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

''மும்பையில் பிறந்தாலும் நான் தமிழச்சி'' - ரேக்ளா வண்டி பயணம்.. ஆடிப்பாடி டான்ஸ்.. கோவையில் பொங்கல் கொண்டாடிய குஷ்பு..!

''மும்பையில் பிறந்தாலும் நான் தமிழச்சி'' - ரேக்ளா வண்டி பயணம்.. ஆடிப்பாடி டான்ஸ்.. கோவையில் பொங்கல் கொண்டாடிய குஷ்பு..!

பொங்கல் கொண்டாட்டத்தில் குஷ்பு

பொங்கல் கொண்டாட்டத்தில் குஷ்பு

கோவையில் பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் நடிகையும் அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு கலந்துகொண்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

கோவை வெள்ளலூரில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பொங்கல் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. ரேக்ளா பந்தயத்தை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு துவங்கி வைத்தார். முன்னதாக அப்பகுதி பெண்களுடன் பொங்கல் வைத்து வழிபட்ட குஷ்பு, அவர்களுடன் இணைந்து வெள்ளி கும்மியாட்டம் ஆடி அசத்தினார். இதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு என்பதை தமிழகம், தமிழ்நாடு என்றும் அழைக்கலாம். அது தவறில்லை எனவும் எப்படி அழைத்தாலும் அது இந்தியாவின் அங்கம்தான் எனவும் கூறினார்.

மேலும் பேசிய அவர், பொங்கல் நம்முடைய பாரம்பரிய பண்டிகை, வீட்டில் சந்தோஷம் கொடுக்கும் பண்டிகை இது. தமிழக அரசின் பொங்கல் பரிசு வெட்க கேடானது. ஒரு கரும்பு, ஆயிரம் ரூபாய் பிச்சை கொடுப்பது போன்று உள்ளது. தமிழ் கலாச்சாரத்தை பாதுகாப்பதாக சொல்லும் திராவிட அரசு இவ்வளவு கேவலமாக நடந்துக் கொள்ளகூடாது என கூறினார்.

மேலும் சமீப காலமாக பாரதிய ஜனதா கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டிற்கு பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது. எல்லா பெண்களும் வெளியே போகவில்லை. நானும் கட்சியில்தானே இருக்கிறேன். திமுகவில் எனக்கு எதிராக தான் நடந்துக் கொண்டனர். ஆனால் அதற்கு பாஜக ஆதரவாக நின்றது. அண்ணாமலை களத்தில் போராடினார். அவர் முந்தைய தலைவர்களை போல இல்லை. மிகவும் துணிச்சலானவர் என கூறினார்.

தொடர்ந்து கமல்ஹாசன் காங்கிரஸ் நடைபயணத்தில் பங்குபெற்றது அவரது கட்சியின் உரிமை என கூறினார். தமிழ்நாடு பெயர் சர்ச்சை குறித்து, தமிழ்நாடு என்பதை தமிழகம், தமிழ்நாடு என்றும் அழைக்கலாம் அது தவறில்லை எனவும் எப்படி அழைத்தாலும் இந்தியாவின் அங்கம்தான் என்றும் தமிழகம், தமிழ்நாடு என்று எப்படி சொன்னாலும் தவறில்லை. மும்பையில் பிறந்தாலும் நான் தமிழச்சி என கூறினார்.

பொங்கலுக்கு எந்த படத்திற்கு செல்வீர்கள்? வாரிசா துணிவா என்ற கேள்விக்கு பொங்கலுக்கு துணிவு, வாரிசு படத்திற்கு போகவில்லை வீட்டில்தான் இருப்பேன் என கூறினார்.

First published:

Tags: BJP, Khushbu