முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Khushbu Arrested: தடையை மீறி போராட்டம் நடத்த சென்ற குஷ்பு கைது

Khushbu Arrested: தடையை மீறி போராட்டம் நடத்த சென்ற குஷ்பு கைது

Khushbu Arrested: தடையை மீறி போராட்டம் நடத்த சென்ற குஷ்பு கைது

சிதம்பரத்தில் திருமாவளவனுக்கு எதிராக பாஜக போராட்டத்திற்கும், பாஜகவுக்கு எதிராக விசிக நடத்த இருக்கும் போராட்டத்துக்கும் போலீஸ் தடை விதித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பெண்களை இழிவாக பேசியதாக கூறி, நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல். திருமாவளவனை கண்டித்து சிதம்பரத்தில் இன்று பாஜக மகளிரணி சார்பில் போராட்டம் நடைபெறுவதாக இருந்தது. அந்த போராட்டத்திற்கு காவல்துறை தடை விதித்து, பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டது. இந்நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்த சென்ற குஷ்பு வழியிலேயே கைது செய்யப்பட்டார்.

பெண்களை இழிவுபடுத்தி விதத்தில் திருமாவளவன் பேசியதாக கூறி அதனைக் கண்டித்து சிதம்பரம் காந்தி சிலை அருகில் பாஜக மகளிரணி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருந்தது. இதில் குஷ்பு, சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் பங்கேற்கவிருந்தனர். இந்நிலையில் கூட்டத்திற்கு அனுமதி அளிப்பது தொடர்பாக சிதம்பரத்தில் வடக்கு மண்டல போலீஸ் ஐஜி நாகராஜன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். அதில் கண்டன ஆர்ப்பாட்டத்தை அனுமதிப்பதில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு எதிராக விசிக நடத்த இருக்கும் போராட்டத்துக்கும் போலீஸ் தடை விதித்துள்ளது.


ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்

First published:

Tags: BJP, Kushbu, Manusmriti, Thol. Thirumavalavan