மக்கள் நீதி மய்ய நிர்வாகக் குழு உறுப்பினர்களின் பெயர்களை அறிவித்தார் கமல்

news18
Updated: July 12, 2018, 6:19 PM IST
மக்கள் நீதி மய்ய நிர்வாகக் குழு உறுப்பினர்களின் பெயர்களை அறிவித்தார் கமல்
கமல் ஹாசன்
news18
Updated: July 12, 2018, 6:19 PM IST
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் பெயர்களை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். உயர்மட்டக் குழு கலைக்கப்பட்டு, அதில் உறுப்பினர்களாக இருந்த 11 பேரும், செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி அண்மையில் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் கட்சிக்கொடியை  கமல்ஹாசன் முதல்முறையாக ஏற்றி வைத்தார். அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், கட்சியின் தலைவராக தான் தொடர்ந்து செயல்பட உள்ளதாக தெரிவித்தார்.

கட்சியின் துணைத் தலைவராக கு.ஞானசம்பந்தன் நியமிக்கப்படுவதாக அவர் அறிவித்தார். பொதுச்செயலாளராக அருணாச்சலமும், பொருளாளராக சுரேஷும் செயல்படுவார்கள் என்று அவர் கூறினார். தற்காலிகமாக அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு கலைக்கப்பட்டு, அதில் உறுப்பினர்களாக இருந்த 11 பேரும், செயற்குழு உறுப்பினர்களாக செயல்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

கட்சியின் அமைப்பு கிழக்கு, வடக்கு, மேற்கு, தெற்கு என 4 மண்டலங்களாக பிரிக்கப்படுவதாக அவர் கூறினார். சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக கட்சியின் நிர்வாகிகளையும் அவர் அறிவித்தார். எனினும், மண்டலப் பொறுப்பாளர்கள், துறை வாரியான 24 அணிகளுக்கான நிர்வாகிகள் ஆகியோர் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று கமல்ஹாசன் தெரிவித்தார். கட்சி மீது குறை கூறப்படுவது குறித்து கவலையில்லை என்றும், மக்கள் நலனுக்காக பாடுபட உள்ளதாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.
First published: July 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...