தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் மீண்டும் தவணை முறையில் வீடுகள்: அரசு தகவல்!

மாதிரிப் படம்

மகாபலிபுரம் சாலையையும், கிழக்கு கடற்கரை சாலையையும் இணைக்க பக்கிங்காம் கால்வாய் மீது சுமார் ரூ.180 கோடி செலவில் உயர்மட்ட சுழற்சாலை வகை மேம்பாலம் கட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் பொருளாதாரத்தில் நலிவுற்ற மற்றும்  குறைந்த  வருவாய்/ மத்திய வருவாய் பிரிவுகளில் வீடு வாங்குவோருக்கு மீண்டும் தவணை முறை திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    தமிழக சட்டப்பேரவையில் இன்று  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் சார்பில் அமைச்சர் சு. முத்துசாமி 30 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில்,  தமிழ்நாடு  வீட்டுவசதி வாரியத்தால்  பொதுமக்கள் வாங்கத்தக்க  விலையில் வீடுகள் வழங்கிடும்  அரசின் முயற்சியை  நிறைவேற்றியும் பொருட்டு சுயநிதித்  திட்டத்தின் கீழ் அடுக்குமாடி  குடியிருப்புகள் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி,  சென்னை  பாடிக்குப்பத்தில்  ரூ.62.77 கோடி மதிப்பில் 155 அடுக்குமாடி குடியிருப்புகள்,  சென்னை அயனாவரத்தில் ரூ.86.31 கோடி மதிப்பில் 216 அடுக்குமாடி குடியிருப்புகள்,  ஈரோடு மாவட்டம் சம்பத் நகர் மற்றும் பெரியார் நகரில் 40.60 கோடி மதிப்பில் 108 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.  இதேபோல்  அம்பத்தூர்-சென்னை, ஆவடி-திருவள்ளுவர்  , சோழிங்கநல்லூர்- சென்னை ,  குடியாத்தம் - வேலூர் மாவட்டம்,  ஆத்தூர் -சேலம் மாவட்டம் ,  ஓசூர் -  கிருஷ்ணகிரி மாவட்டம்.  தத்தநேரி- மதுரை மாவட்டம் ஆகிய பகுதிகளில் மனை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மனைகள் மேம்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க: யாருக்கெல்லாம் திருமண உதவி திட்டத்தில் நிதியுதவி கிடைக்காது?



     தவணை முறையில் திட்டத்தில் வீடுகள்


    தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், பொருளாதாரத்தில் நலிவுற்ற மற்றும் குறைந்த வருவாய் / மத்திய வருவாய் பிரிவுகளில் வீடு வாங்குவோரின் பொருளாதார அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் தவணை முறை திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் . சென்னை லாயிட்ஸ் காலனியில் ரூ.451 கோடி மதிப்பில் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் மறுமேம்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: குண்டும், குழியுமான சாலைக்கு சுங்க கட்டணம் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிருப்தி!


    கோயம்பேடு மொத்த விற்பனை வளாகத்தை ரூ.20 கோடி செலவில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பழைய மகாபலிபுரம் சாலையையும், கிழக்கு கடற்கரை சாலையையும் இணைக்க பக்கிங்காம் கால்வாய் மீது சுமார் ரூ.180 கோடி செலவில் உயர்மட்ட சுழற்சாலை வகை மேம்பாலம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Murugesh M
    First published: