பழனியில் கேரள பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. புகார் வாங்க மறுத்த போலீஸ் - டாக்டர் ராமதாஸ் கண்டனம்

ராமதாஸ்

தமிழ்நாட்டின் புனிதத் தலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

  • Share this:
    பழனி முருகன் கோவிலுக்கு வந்த  கேரள பெண்ணை கடத்திய ஒரு கும்பல்  விடுதியில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பழனி முருகன் கோவிலுக்கு கணவனுடன் வந்த பெண்ணை தங்கும் விடுதியில் அழைத்துச் சென்று சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்கள் எழுந்துள்ளது. பழனி காவல்துறையினர் புகார் வாங்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபுவிற்கு கேரள டிஜிபி அனில்குமார் கடிதம் எழுதியுள்ளார். பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்த புகாரைக் கூட காவல்துறை வாங்க மறுத்திருப்பதும் தமிழகம் தலைகுனிய வேண்டிய செயல்கள் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக ட்விட்டரில் கண்டனம் பதிவிட்டுள்ள ராமதாஸ், “பழனி முருகன் கோயிலுக்கு கடந்த மாதம் 19-ஆம் தேதி  வழிபாட்டுக்காக வந்த கேரளத்தை சேர்ந்த 40 வயது பெண் அங்குள்ள கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக  வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.கேரள பெண்ணின் கணவனை அடித்துத் துரத்தி விட்டு, அங்குள்ள விடுதிக்கு கடத்திச் சென்று இந்தக் கொடுமையை அந்த  கும்பல் செய்திருக்கிறது. அதனால் பாதிக்கப்பட்ட பெண் கேரளத்தில் கண்ணூர் அரசு மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறார்.

     



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதைவிடக் கொடுமை தமக்கு இழைக்கப்பட்ட கூட்டு பாலியல் வன்கொடுமை குறித்து பழனி காவல்நிலையத்தில்  அப்பெண் புகார் கொடுத்தும் அதை வாங்க காவல்துறையினர் மறுத்து விட்டனர் என்பது தான். இதுபற்றி தமிழக டிஜிபிக்கு கேரள டிஜிபி கடிதம் எழுதியுள்ளார்.தமிழ்நாட்டின் புனிதத் தலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதும், பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்த புகாரைக் கூட காவல்துறை வாங்க மறுத்திருப்பதும் தமிழகம் தலைகுனிய வேண்டிய செயல்கள். இதற்கு காரணமான அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: