எழுத்தறிவு விகிதம் குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய கல்வி இணையமைச்சர் அன்னபூர்ணா தேவி பதிலளித்துள்ளார். இந்தியாவில் எழுத்தறிவு விகிதத்தை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும் பள்ளிக் கல்வியின் அனைத்து நிலைகளிலும் குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தவும், கல்வியில் பாலின மற்றும் சமூக இடைவெளிகளைப் போக்கவும் சமக்ர சிக்ஷா அபியான் என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாகவும் கூறினார்.
மேலும் முதியோரிடையே எழுத்தறிவு விகிதத்தை மேம்படுத்தும் விதமாக முதியோா் கல்வித் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது. குறிப்பாக நக்சல்கள் பாதிப்புடைய மாவட்டங்கள் மற்றும் 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பெண்கள் எழுத்தறிவு 50 சதவீதத்துக்கும் கீழுள்ள 26 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 404 மவட்டங்களில் உள்ள கிராமப்புறங்களில் இந்த முதியோா் கல்வித் திட்டம் உள்ளதாக அன்னபூர்ணா தேவி தெரிவித்தார்.
12-வது ஐந்தாண்டு திட்ட காலத்தின் முடிவில் நாட்டின் ஒட்டுமொத்த எழுத்தறிவு விகிதத்தை 80 சதவீதம் அளவுக்கு உயா்த்தவும், எழுத்தறிவு பாலின இடைவெளியை 10 சதவீதம் அளவுக்கு குறைக்கவும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. 2010 முதல் 2018 மாா்ச் மாதம் வரை ஆண்டுக்கு இருமுறை தேசிய திறந்தநிலை பள்ளிக் கல்வி நிறுவனம் (என்ஐஓஎஸ்) சாா்பில் நடத்தப்பட்ட அடிப்படை எழுத்தறிவு ஆய்வுத் தோ்வில் 7.64 கோடி போ் தோ்ச்சி பெற்று, எழுத்தறிவு பெற்றவா்களுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது" என்று அன்னபூா்ணா தேவி தெரிவித்துள்ளாா்.
இந்தியாவில் எழுத்தறிவு பெற்ற மாநிலங்களின் பட்டியலில் கேரளா மாநிலம் 94 சதவீதத்துடன் முதலிடத்திலும் பீகார் கடைசி இடத்திலும் உள்ளன. இந்தப் பட்டியலில் 80.09 சதவீதத்துடன் தமிழகம் 14-ஆவது இடத்தில் உள்ளது. 2வது இடத்தில் லட்சத் தீவுகளும் அடுத்தடுத்த இடங்களில் மிசோரம் (91.33%),கோவா (88.7%), திரிபுரா (87.22%), டாமன் டையூ (87.1%), அந்தமான் நிகோபாா் தீவுகள் (86.63%), டெல்லி (86.21%), சண்டிகார் (86.05%), புதுச்சேரி (85.85%) அடுத்தடுத்து இடங்களை பெற்றுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.