சுகாதாரத் துறையில் கேரளா முன்னிலை: தமிழகத்தின் நிலை என்ன?

சுகாதாரத் துறையில் கேரளா முன்னிலை: தமிழகத்தின் நிலை என்ன?
கோப்பு படம்
  • News18
  • Last Updated: June 26, 2019, 7:19 AM IST
  • Share this:
சுகாதாரத் துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், தமிழகம் 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறையில் மாநிலங்களின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை நிதி ஆயோக் அமைப்பு ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

நோய்களை வரும் முன் காப்பது , விழிப்புணர்வு உண்டாக்குவது, நோய் பரவாமல் தடுப்பது உள்ளிட்ட 23 அம்சங்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்படுகிறது.


இதன்படி, இந்த ஆண்டு வெளியான அறிக்கையில், தலைசிறந்த மாநிலமாக கேரளா இடம்பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஆந்திரப்பிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்கள் உள்ளன. கடந்த ஆண்டில் 3-வது இடத்திலிருந்த தமிழகம், தற்போது 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்கள், மிகவும் பின்தங்கியுள்ளன. தமிழ்நாட்டின் இந்த பின்னடைவுக்கு கர்ப்பினி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் எற்றியது போன்றவை காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் பார்க்க:
First published: June 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading