ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தின் குடிநீர் தேவைக்கு உதவ முன்வந்த கேரளா!

தமிழகத்தின் குடிநீர் தேவைக்கு உதவ முன்வந்த கேரளா!

கோப்புப் படம்

கோப்புப் படம்

  • 1 minute read
  • Last Updated :

தமிழகத்தின் தண்ணீர் தேவைக்கு உதவ கேரள அரசு முன்வந்துள்ளது.

தமிழகத்தில் நிலவும் கடும் தண்ணீர் பஞ்சம் காரணமாக குடிநீருக்காக மக்கள் அல்லல் படும் நிலை உருவாகியுள்ளது. தலைநகர் சென்னையில் நிலைமை மோசமடைந்துள்ளது.

தமிழக அரசு லாரிகள் மூலம் எல்லா பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்து வந்தாலும், தட்டுப்பாடு தீர்ந்த பாடில்லை.

மழை பெய்தால் ஒழிய தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படாத சூழலே தற்போது நிலவுகிறது. இந்நிலையில், தமிழகத்தின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கேரள அரசு உதவ முன்வந்துள்ளது.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடிநீர் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். தங்களது முடிவை ஏற்க தமிழகம் மறுத்து விட்டதாகவும், தற்போது உதவி தேவையில்லை என தமிழகம் தெரிவித்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். திருவனந்தபுரத்தில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு 20 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்த சூழலில் கேரளா இந்த உதவியை வழங்க முன்வந்துள்ளதாகவும் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

First published:

Tags: Save Water, Water Crisis