• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கஜா புயல் நிவாரணத்துக்காக தமிழகத்திற்கு ₹10 கோடி நிதியுதவி - கேரள முதலமைச்சர் அறிவிப்பு

கஜா புயல் நிவாரணத்துக்காக தமிழகத்திற்கு ₹10 கோடி நிதியுதவி - கேரள முதலமைச்சர் அறிவிப்பு

கேரள முதலவர் பினராயி விஜயன்

கேரள முதலவர் பினராயி விஜயன்

தமிழகத்திற்கு உடனடி உதவி நிதியாக 10 கோடி ரூபாய் வழங்கிட கேரள அரசு முடிவெடுத்துள்ளது. இந்த தகவலை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உடனடி நிதிஉதவியாக 10 கோடி ரூபாய் வழங்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

    கேரள மாநில அமைச்சரவைக் கூட்டம் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உடனடி உதவி நிதியாக 10 கோடி ரூபாய் வழங்கிட முடிவெடுக்கப்பட்டது. இந்த தகவலை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 14 லாரிகளில் உணவு மற்றும் உடைகள் போன்ற நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

     






    6 மருத்துவக்குழுக்களும், 72 கேரள மின்வாரிய அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், தேவையை பொறுத்து உதவியை அதிகரிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    கேரள முதலமைச்சரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாசன், தான் வேண்டுகோள் வைத்த 24 மணி நேரத்தில் துரிதமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை மனிதத்தின் வெளிப்பாடு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: