பாராட்டிய கமல்ஹாசன்... நன்றி தெரிவித்த கேரள காவல்துறை...!

கமலின் வார்த்தைகள் காவலர்களை உற்சாகப்படுத்தியதோடு ஊக்கமளித்து இருப்பதாகவும் கேரள காவல்துறை கூறியுள்ளது.

பாராட்டிய கமல்ஹாசன்... நன்றி தெரிவித்த கேரள காவல்துறை...!
கமல்ஹாசன்
  • Share this:
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு கேரளா காவல்துறை கடிதம் மூலம் நன்றி தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலை தடுப்பதற்காக பொதுமக்களுக்கு பாடல் மற்றும் நடனம் மூலம் கேரளா காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தியது நாடு முழுவதும் பேசப்பட்டது. இக்கட்டான சூழலிலும் அறிவுப்பூர்வமாக செயல்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக நடிகர் கமல்ஹாசன் கேரள காவல்துறைக்கு டிவிட்டர் மூலம் பாராட்டு தெரிவித்திருந்தார்.

கமல்ஹாசனின் பாராட்டுக்கு கேரள காவல்துறை தற்போது கடிதம் மூலம் நன்றி தெரிவித்துள்ளது. கமலின் வார்த்தைகள் காவலர்களை உற்சாகப்படுத்தியதோடு ஊக்கமளித்து இருப்பதாகவும் கேரள காவல்துறை கூறியுள்ளது.


Also see:
First published: April 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading