கேரளாவில் சீமானிடம் காவல்துறையினர் விசாரணை

கேரளாவில் சீமானிடம் காவல்துறையினர் விசாரணை
சீமான் (கோப்புப் படம்)
  • News18
  • Last Updated: August 26, 2018, 10:39 AM IST
  • Share this:
கேரளாவுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கச் சென்ற நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை, அம்மாநில காவல்துறையினர் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்குவதற்காக, சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் அம்மாநிலத்துக்கு சென்றனர். கோட்டயம் பகுதியில் உள்ள நிவாரண முகாமிற்கு சென்று சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை அவர்கள் வழங்கினர்.

பொருட்களை வழங்கிவிட்டு அவர்கள் திரும்பிய போது, அம்மாநில காவல்துறையினர் சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த அனைவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களிடம் காவல்நிலையத்தில் வைத்து கேரள போலீஸார் விசாரணை நடத்தினர்.
First published: August 26, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading