கீழடி அருகே கொந்தகையில் மண்டை ஓடுடன் எலும்புகள் கண்டுபிடிப்பு
சிவகங்கை மாவட்டம் மாவட்டம் கொந்தகையில் மண்டை ஒடுடன் எலும்புகள் கண்டுபிடிக்கபட்டுள்ளன.

கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடு
- News18
- Last Updated: June 5, 2020, 10:04 PM IST
சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் முடிவடைந்து ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி தொடங்கியது. ஆறாம் கட்ட அகழாய்வு கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு பணிகள் நடந்து வந்தன. கொரானோ வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி அகழாய்வு இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
மே 22-ம் தேதி முதல் மீண்டும்பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வரும் நிலையில், நேற்று கீழடியில் ஒரு குழி தோண்டும்போது பெரிய விலங்கின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. சுமார் 3 மீட்டர் அளவில் இருக்கும் இந்த எழும்புகளை கண்டறிந்த தொல்லியல்துறையினர் மகிழ்ச்சியடைந்தனர்.
கொந்தகை அகழாய்வு பணிகள் நடக்கும் இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் கதிரேசன் என்பவர் இடத்தின் அருகே தென்னை மரத்திற்கு ஜே.சி.பி மூலம் குழிகள் வெட்டும் போது ஏதோ தென்பட்டு உள்ளது. கதிரேசன் உடனடியாக அகழாய்வு நடக்கும் இடத்தில் இருந்த தொல்லியல் துறை இயக்குனர் சிவானந்திடம் கூறி உள்ளார். உடனடியாக தொல்லியல் ஆய்வாளர்கள், மரபணு ஆய்வாளர்கள் குழிக்குள் இறங்கி மண்டை ஓடு, எலும்புகளை எடுத்து ஆய்வுக்காக கொண்டு சென்றனர். இந்த் மண்டை ஓடு எந்த காலத்தைச் சேர்ந்தவை என ஆய்வு நடத்தப்படுகிறது.
ஏற்கனவே 5ம் கட்ட அகழாய்வின்போது பண்டைய தமிழர்களின் வேளான்மைத் தொழில் நுட்பம், நெசவு, கால்நடை வளர்ப்பு, நீர் மேலான்மை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ஆதாரத்துடன் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. ஆறாம் கட்ட அகழாய்வில் கொந்தகை பகுதியில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டதும் மணலூரில் சுடுமண்ணால் ஆன உலை கண்டிபிடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மே 22-ம் தேதி முதல் மீண்டும்பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வரும் நிலையில், நேற்று கீழடியில் ஒரு குழி தோண்டும்போது பெரிய விலங்கின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. சுமார் 3 மீட்டர் அளவில் இருக்கும் இந்த எழும்புகளை கண்டறிந்த தொல்லியல்துறையினர் மகிழ்ச்சியடைந்தனர்.
கொந்தகை அகழாய்வு பணிகள் நடக்கும் இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் கதிரேசன் என்பவர் இடத்தின் அருகே தென்னை மரத்திற்கு ஜே.சி.பி மூலம் குழிகள் வெட்டும் போது ஏதோ தென்பட்டு உள்ளது. கதிரேசன் உடனடியாக அகழாய்வு நடக்கும் இடத்தில் இருந்த தொல்லியல் துறை இயக்குனர் சிவானந்திடம் கூறி உள்ளார்.