கீழடி 7ம் கட்ட அகழாய்வு பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

Youtube Video

தமிழர்களின் 2600 ஆண்டு சங்ககால நாகரிகத்தை வெளிப்படுத்தும் முயற்சியில், கீழடி ஏழாம் கட்ட அகழாய்வு முக்கியத்துவம் வாய்ந்தது என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  சிவகங்கை மாவட்டம் கீழடி உள்ளிட்ட பகுதிகளில், 7ம் கட்ட அகழாய்வு பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதனைதொடர்ந்து முதற்கட்டமாக கீழடியில் ஆறு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களிலும் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆறு கட்ட அகழாய்வுகளிலும் சுமார் 3,500க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் அந்த அகழாய்வில், கீழடியில் ஆமை உருவம் பொறித்த சுடுமண் முத்திரை, மிகப்பெரிய விலங்கின் எலும்புக்கூடு, 38 உறைகளை கொண்ட மிகப்பெரிய உறைகிணறு மற்றும் முதுமக்கள் தாழிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

  இந்தநிலையில் கீழடி அகழாய்வின் 7ம் கட்ட பணிகள் குறித்து பேசிய சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, 2600 ஆண்டுகள் பழமையான தமிழர்களின் சங்ககால நாகரிக பெருமைகளை வெளிக்கொண்டுவரும் முயற்சியில், இப்பணிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று குறிப்பிட்டார்.

  மேலும் படிக்க... வீட்டில் அளவுக்கு அதிகமான தொழிநுட்ப சாதனங்கள் இருப்பது நல்லதல்ல..

  தொல்லியல்துறை இயக்குநர் சிவானந்தம் கூறுகையில், கீழடியை தொடர்ந்து கொந்தகை, அகரம் மற்றும் மணலூர் போன்ற இடங்களிலும் பணிகள் விரைவாக நடத்தப்படும் என்றார். கீழடி அகழாய்வு பணிகள் தமிழர்களின் சங்ககால நாகரிகத்தை அறிந்துகொள்வதற்கான வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.  மேலும் படிக்க... கடலூர் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தல் - 4 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: