மழையால் கீழடியில் நடைபெறும் 6ஆம் கட்ட அகழாய்வு பணிகள் கடுமையாக பாதிப்பு 

மழையால் பாதிக்கப்பட்டுள்ள கிழடி அகழாய்வு

கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

  • Share this:
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. அதில் கீழடி,கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது.பிப்ரவரி மாதம் 19ல் தொடங்கிய பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பணிகள் செப் 30ஆம் தேதி நிறைவு பெறுவதை யொட்டி பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இதன் இடையே தொடர்  மழை காரணமாக அவ்வப்போது பணிகள் நிறுத்தபட்டு வருகின்றன. கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக கடும் காற்று மழையால் பணிகள் கடுமையாக பாதிக்கபட்டுள்ளன.

இதனால் தொல்லியல் துறையினர் வேலை செய்வதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. இங்கு நான்கு இடங்களில் நடந்து வரும் அகழாய்வில் 3,000க்கு மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கபட்டு இருந்தன. இதில் அகரத்தில் நடைபெற்ற பணியின் போது 5அடுக்கு உறை கிணறு கண்டுபிடிக்க பட்டுள்ளது. உறை முக்கால் அடி உயரமும் இரண்டு அடி அகலமும் கொண்டு உள்ளது.

படிக்க...Horoscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...! (செப்டம்பர் 10, 2020)

இதுவரை மொத்தம் 12 உறைகள் கொண்ட கிணறு கண்டு பிடிக்கபட்டு இருந்தன. ஏற்கனவே அகரத்தில் சிறிய பனைகள் ,நத்தை ஓடுகள் சங்கு வளையல்கள், தங்க நாணயங்கள், மற்றும் பல்வேறு பொருட்கள் கண்டுபிடிக்கபட்டு உள்ளது.

ஏற்கனவே இங்கு மக்கள் வசிப்பிடமாக இருந்து வந்ததால் அதன் அடிப்படையில் அகரத்தில் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். தண்ணீரை எவ்வாறு சேமிக்க வைத்து வேண்டும் என்றும் அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் எனவும்  பழங்காலத்தில் சிந்தித்து உள்ளனர்.

மேலும் படிக்க...கீரி - பாம்பு இடையே பிரமிக்க வைக்கும் சண்டை: வைரலாகும் வீடியோ

தொடர்ந்து அகழாய்வு நடைபெறும் கிழடி பகுதியில் விலங்கின் எலும்பு கூடுகள்,கட்டிட சுவர்கள் ,சிறிய பெரிய பனைகள் ,கழிவு நீர் வாய்கால்கள், இரும்பு உலைகள் ஆகியவை கண்டு பிடிக்கபட்டு உள்ளன. இதே கொந்தகை அகழாய்வில் மனித எலும்பு கூடுகள், முதுமக்கள் தாழிகள், குழந்தையின் முழு  எலும்புகள் கண்டுபிடிக்க பட்டு இருந்தன.இதே போல்  மணலூரில் சுடுமண் உலை ,சிறிய ,பெரிய எலும்புகள் கண்டுபிடிக்க பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. நான்கு இடங்களிலும் தொடர்ந்து அகழாய்வில் வியக்கத்தக்க பொருட்கள், பழங்கால மக்கள் வாழ்ந்த நகர, நாகரிகம்,  பயன்படுத்திய பொருட்கள் ,விவசாயத்தில் அப்போதே சிறந்து விளங்கிய ஆதாரங்கள் கிடைத்து வருவதால் பழங்கால தமிழரின் சிறப்பு உலகத்திற்கே எடுத்துகாட்டாக உள்ளது.
Published by:Vaijayanthi S
First published: