கீழடி அகழாய்வு, இரட்டைச் சுவர் ராஜாக்கள் வாழ்ந்த அரண்மனைகளா?

news18
Updated: June 25, 2019, 3:38 PM IST
கீழடி அகழாய்வு, இரட்டைச் சுவர் ராஜாக்கள் வாழ்ந்த அரண்மனைகளா?
கீழடி அகழாய்வு
news18
Updated: June 25, 2019, 3:38 PM IST
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் தமிழக தொல்லியல் துறை மூலம் 5-ம் கட்ட அகழாய்வில் பழங்கால இரட்டைச்சுவர் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கீழடியில் கடந்த 13-ம் தேதி தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் 5-ம் கட்ட அகழாய்வை தொடங்கிவைத்தார். 47 லட்ச ரூபாய் செலவில் கருப்பையா என்பவரின் ஒரு ஏக்கர் நிலத்தில் அகழாய்வுப் பணிகள் தொடங்கியுள்ளன.

முதல் கட்டமாக நான்கு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. கடந்த நான்கு கட்ட அகழாய்விலும் 12 மீட்டர் ஆழத்திற்கு பின்தான் பொருட்கள் கிடைக்க ஆரம்பித்தன. ஆனால் தற்போது 5-ம் கட்ட அகழாய்வில் 5 மீட்டர் ஆழத்திலேயே மண் ஓடுகள், மண் பானைகள், அழகு பானைகள் உள்ளிட்டவைகள் கிடைத்துள்ளன.

முருகேசன் என்பவரது நிலத்தில் நான்கு குழிகள் தோண்டும் பணி நேற்று காலை தொடங்கியது. இரண்டு அடி ஆழத்திலேயே பழங்கால சுவர் தென்பட ஆரம்பித்ததும் தொழிலாளர்கள் கவனத்துடன் தோண்டியுள்ளனர்.

அப்போது நீண்ட சுவருக்கு பக்கத்தில் பாதியளவு சுவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டு சுவர்களிலும் இரண்டு அடி நீளமும், ஒரு அடி அகலமும் 15 செ.மீ உயரமும் கொண்ட செங்கற்கள் உள்ளன.

நல்ல நிறத்துடனும் உறுதிதன்மையும் கொண்ட இச்செங்கற்கள் வரிசையாக இல்லாமல் ஒன்றன் மேல் ஒன்றாக சரிவான வகையில் அடுக்கி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த சுவர் கட்டிடத்தின் மேற்பகுதியா, கீழ்பகுதியா என கண்டறியமுடியவில்லை.

கட்டிடத்தின் அடிப்புறம் வரை தோண்டியபின்தான் உறுதியாக சொல்ல முடியும், இந்த சுவர் கட்டிடத்தின் முழு படிவமும் கிடைத்தால், இதில் யாரும் வாழ்ந்திருந்த அடையாளம் கிடைக்க வாய்ப்புள்ளது.

கடந்த நான்கு கட்ட அகழாய்வில் கட்டிட சுவர்கள் சிதிலமடைந்து கிடைத்த நிலையில் இதில் சுவர் முழுமையாக இருப்பதால் முழு கட்டிடமும் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே தொல்லியல் துறையினர் கவனமுடன் அகழாய்வை தொடர்ந்து செய்கின்றனர்.

மேலும் பார்க்க:
First published: June 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...