• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • ‘லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்’ - கே.சி.வீரமணி

‘லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்’ - கே.சி.வீரமணி

கே.சி.வீரமணி

கே.சி.வீரமணி

சோதனையில் அவர்களுக்கு எந்தவித ஆதாரமும் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றிருக்கிறார்கள் என்றார் கே.வி.வீரமணி.

 • Share this:
  முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் 18 நேரத்திற்கு பிறகு முடிந்த லஞ்ச ஒழிப்பு துறை சோதனை பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக தகவல்கள் வெளியான நிலையில், அரசியல் காழ்புணர்ச்சிபோடு பழிவாங்கும் நடவடிக்கையாகவும், உள்ளாட்தி தேர்தலில் நாங்கள் நிற்பதற்க்கு இடையூறு ஏற்படுத்தவும் நடத்தப்பட்ட சோதனை இது, அவர்களுகு தேவையானது எதுவும் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதற்கான பதிலை உள்ளாட்சி தேர்தலில் நிறுபித்து காட்டுவோம் என கே.சி.வீரமணி கூறியுள்ளார்.

  அதிமுக முன்னாள் அமைச்சரான திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்த கே.சி.வீரமணி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ந்ததாக லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்த நிலையில் நேற்று காலை 6 மணி முதல் ஜோலார்பேட்டையில் உள்ள கே.சி.வீரமணியின் வீடு, சகோதரர்கள், உறவினர்கள் வீடு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, ஓசூர், பெங்களூர், சென்னை உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடைபெற்றது.

  18 மணி நேர சோதனைக்கு பிறகு ஜோலார்பேட்டையில் உள்ள கே.சி.வீரமணி வீட்டில் சோதனை இரவு 11.15 அளவில் நிறைவடைந்தது. இதில் மொத்தம் 34 லட்சம் ரொக்கம், 1 லட்சத்தி 80 ஆயிரம் மதிப்பிலான டாலர், ரோல்ஸ் ராயல்ஸ் கார் உட்பட 9 சொகுசு கார்கள், 5 கிலோ தங்க நகைகள், 7 கிலோ வெள்ளி, 47 கிராம் வைர நகைகள், 5 கம்யூட்டர், ஹாட்டிஸ்க், வங்கி கணக்கு புத்தகங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்து சென்றனர். 30 லட்சம் மதிப்பிலான மணலும் கணக்கில் உள்ளது.

  இந்நிலையில், அதிகாரிகள் காரில் வெளியேறும் போது கார்கள் மீது அங்கு கூடியிந்த கட்சியினர் தாக்குதல் நடத்தினர். சோதனை நடந்த அனைத்து இடங்களிலும் சோதனை முடிந்துள்ளது. வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த, வேலூர் ஒன்றிய செயலாளர் கர்ணல் வீடு, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த கே.சி.வீரமணி உதவியாளர் ஷ்யாம் ஆகிய இருவர் வீட்டிலும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்து எடுத்து செல்லப்பட்டுள்ளது.

  சோதனை முடிந்த பின்னர் செய்தியாளர்களுக்கு கே.சி.வீரமணி அளித்த பேட்டியில், நேரத்தை வீணடித்து அரசியல் விளம்பரம் தேட செய்யப்பட்டது இந்த சோதனை. வரலாற்றில் பல்வேறு சோதனைகளை கடந்து வந்துள்ளோம். முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை செய்வது நடைமுறையில் சாத்தியம். அரசியல் காழ்புணர்ச்சிக்காக 5 ஓன்றிய கழக செயலாளார்கள், கழகத்தின் பல்வேறு பொறுப்பாளர்களின் இல்லங்களில் சோதனை நடத்துவது.

  அடிமட்ட உறுப்பினர்கள் வீட்டில் சோதனை நடத்துவது இதுவரை அரசியல் வரலாற்றில் இல்லை. சோதனை என்ற பெயரில் அரசியல் காழ்ப்புணர்ச்சி. உள்ளாட்சி தேர்தலை சந்திக்க இருக்கின்றோம். உள்ளாட்சி தேர்தலில் இடையூறுகளை ஏற்படுத்துவதற்காகவே இதைபோன்று ஆளும் கட்சியினருடைய ரெய்டு என்ற பெயரில் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

  நாங்கள் எதையும் நீதிமன்றத்தின் வாயிலாக சந்திக்க தயாராக உள்ளோம். இன்றைக்கு நடைபெற்ற சோதனையில் அவர்களுக்கு எந்தவித எவிடன்சும் (ஆதாரமும்) கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றிருக்கிறார்கள். நீதிமன்ற வாயிலாக எந்த வழக்கு தொடுத்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம். தேர்தல் களமானாலும், நீதிமன்றமானாலும், மக்கள் மன்றமாக இருந்தாலும் எந்தவிதத்தில் சந்திக்க வேண்டுமோ அதற்க்கு தயாராகவே இருக்கிறோம்.

  Must Read : ரோல்ஸ் ராய்ஸ் கார், அமெரிக்க டாலர், வைர நகைகள்... முன்னாள் அமைச்சர் வீரமணி வீட்டில் சிக்கியது என்ன?

  ரெய்டுபோன்ற அச்சுறுத்தல்களையெல்லாம் நாங்கள் கடந்த காலத்தில் கடந்து வந்தவர்கள். 50 ஆண்டை கடந்த கட்சி அதிமுக. எதிர்வாரும் பல 100 ஆண்டுகள் ஆனாலும் இயக்கம் வளர்வதற்கும் உறுதுணையாக இருப்போம் இவ்வாறு கூறினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Suresh V
  First published: