Home /News /tamil-nadu /

அதிமுக சின்னத்தை முடக்கி, ரஜினியை முன்னிறுத்தி நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாஜக திட்டம்? கே.சி.பழனிசாமி

அதிமுக சின்னத்தை முடக்கி, ரஜினியை முன்னிறுத்தி நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாஜக திட்டம்? கே.சி.பழனிசாமி

கே.சி.பழனிசாமி

கே.சி.பழனிசாமி

ரஜினி யை முன்னிறுத்தி பா.ஜ.க தலைமையில் கூட்டணி அமைத்து அதில் சிதறுண்ட அதிமுக குழுக்களை சேர்த்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள திட்டமிடுகிறதா பா.ஜ.க - கே.சி.பழனிசாமி

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    அதிமுக சின்னத்தை முடக்கி ரஜினியை முன்னிறுத்தி நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளதா என முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

    அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பான  பனிப் போர் கடந்த மாதம் 11ம் தேதி உச்ச கட்டத்தை எட்டியது. அன்றைய தினம் வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.  ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

    எனினும், தாங்கள்தான் உண்மையான அதிமுக எனக் கூறிவரும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். மேலும், அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்துள்ளார். இதன் விசாரணை நடந்து வருகிறது. மேலும், உண்மையான அதிமுக யார் என்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் இரு தரப்பு முறையிட்டுள்ளன.



    இந்நிலையில், அதிமுக சின்னத்தை முடக்கி ரஜினியை முன்னிறுத்தி நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளதா என முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சுயநலத்தால் bjpயின் சூழ்ச்சிக்கு அதிமுகவை பழிகொடுத்த Eps & ops வரும் நாடாளுமன்ற தேர்தலில் admkவை உடைத்து சின்னத்தை முடக்கி, ரஜினி யை முன்னிறுத்தி பா.ஜ.க தலைமையில் கூட்டணி அமைத்து அதில் சிதறுண்ட அதிமுக குழுக்களை சேர்த்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள திட்டமிடுகிறதா பா.ஜ.க ?” என வினா எழுப்பியுள்ளார்.

     
    Published by:Murugesh M
    First published:

    Tags: ADMK, BJP, Rajinikanth

    அடுத்த செய்தி