தாராபுரத்தில் எல்.முருகனை தோற்கடித்த கயல்விழிக்கு அமைச்சரவையில் இடம்

தாராபுரம் எம்எல்ஏ கயல்விழி

தாராபுரம் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகனை தோற்கடித்த கயல்விழிக்கு ஆதித்திராவிடர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

 • Share this:
  தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை தொடர்ந்து நாளை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் திமுக-வின் அமைச்சர்கள் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.

  திமுக வெளியிட்டுள்ள பட்டியலில் தாராபுரம் தொகுதியில் பாஜக மாநில தலைவர் எல்.முருகனை எதிர்த்து வெற்றி பெற்ற கயல்விழிக்கும் அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது. ஆதித்திராவிடர் நலத்துறை அமைச்சராக கயல்விழி நியமிக்கப்பட்டுள்ளார்.

  முதல்வராக பதவியேற்கும் மு.க.ஸ்டாலின், மக்கள், பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, மாவட்ட வருவாய் அதிகாரிகள், உள்துறை, சிறப்புத் திட்டங்கள், மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் ஆகிய துறைகளை தனக்கு ஒதுக்கிறார். அவரைத் தொடர்ந்து துரைமுருகனுக்கு நீர்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கே.என்.நேருவுக்கு நகராட்சி நிர்வாகத்துறை ஒதுக்கப்படுகிறது. நகர்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறையும் ஒதுக்கப்படுகிறது.

  ஐ.பெரியசாமிக்கு கூட்டுறவுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. பொன்முடி உயர் கல்வித்துறை அமைச்சராக பதவியேற்கவுள்ளார். எ.வ.வேலுவுக்கு பொதுப் பணித்துறை ஒதுக்கப்படுகிறது. எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்துக்கு விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு வருவாய் மற்றும் பேரிடம் மேலாண்மைத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

  தங்கம் தென்னரசுவுக்கு தொழிற்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ரெகுபதிக்கு சட்டத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. வீடு மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை எஸ்.முத்துசாமிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.பெரிய கருப்பனுக்கு கிராமப் புற வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
  Published by:Vijay R
  First published: