ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னையில் அறிமுகமானது நடமாடும் காதிகிராப்ட் பொருட்கள் விற்பனை வாகனம்..!

சென்னையில் அறிமுகமானது நடமாடும் காதிகிராப்ட் பொருட்கள் விற்பனை வாகனம்..!

நடமாடும் விற்பனை வாகனம்

நடமாடும் விற்பனை வாகனம்

தமிழ்நாடு கதர் கிராம தொழில்நிறுவனமான காதிகிராப்ட் சார்பில் உற்பத்தியாகும் பொருட்கள் பொதுமக்களை சென்று சேரும் வகையில் நடமாடும் விற்பனை வாகனம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நடமாடும் விற்பனை வாகனத்தை  காதிகிராப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு கதர் கிராம தொழில் நிறுவனமான  காதிகிராப்ட் சார்பில் உற்பத்தியாகும் பொருட்கள் பொதுமக்களை சென்று சேரும் வகையில் நடமாடும் விற்பனை வாகனம்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பெண் சுய உதவிக்குழுக்கள் மற்றும் கிராமத்தில் உள்ள சிறு தொழில் முனைவோர்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் காதி கிராப்ட்  நிறுவனத்தில் விற்பனை செய்ய செய்யப்படுகின்றது.

விற்பனையை அதிகரித்திடவும் காதிகிராப்ட்  நிறுவனத்தின் பொருட்கள் மக்களை எளிதாக சென்று சேரும் வகையில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள விற்பனை வாகனத்தை காதிகிராப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னையில் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அந்த வாகனம் மக்கள் கூடும் இடங்களில் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. சோப்பு, சுத்தமான தேன், பட்டுப் புடவை, பனை தயாரிப்பு பொருட்கள் உள்ளிட்டவை விற்பனைக்காக கொண்டுவரபப்படுகிறது.

15 ரூபாய் மதிப்புள்ள குளிக்கும் சோப்பு முதல் 20,000 மதிப்பிலான பட்டுப்புடவை வரை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. காதி நிறுவனத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் கலப்படம் இல்லாத சுத்தமான பொருட்கள் என்பதால் மக்கள் பொருட்களை ஆர்வத்துடன் வாங்கிச்செல்கின்றனர்.

Also see:

Published by:Sankaravadivoo G
First published:

Tags: Chennai