முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அகப்பட்டவன் மட்டும் அயோக்கியன் போல - கே.டி.ராகவன் பாலியல் வீடியோ விவகாரத்தில் கஸ்தூரி ட்விட்

அகப்பட்டவன் மட்டும் அயோக்கியன் போல - கே.டி.ராகவன் பாலியல் வீடியோ விவகாரத்தில் கஸ்தூரி ட்விட்

கஸ்தூரி

கஸ்தூரி

கே.டி.ராகவன் விவகாரம் தொடர்பாக நடிகை கஸ்தூரி ட்வீட் செய்துள்ளார்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப் பெருமாள் கோவிலைச் சேர்ந்தவர் 45 வயதான கேடி ராகவன். வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டுள்ள இவர், தமிழக பாஜகவில் மாநிலப் பொதுச் செயலாளராக உள்ளார்1999ம் ஆண்டு செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி, 2006ம் ஆண்டு காஞ்சிபுரம் தொகுதி, 2011ம் ஆண்டு செங்கல்பட்டு தொகுதி மற்றும் 2016ம் ஆண்டு கொளத்துார் சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டவர்.

இந்த நிலையில், தனியார் செய்தி நிறுவனத்தில் பணியாற்றுபவரும், பாஜக உறுப்பினருமான மதன் ரவிச்சந்திரன் என்பவர், செவ்வாய்க்கிழமை அன்று தனது யூடியூப் சேனலில் கேடி ராகவன் பற்றிய சர்ச்சைக்குரி்ய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில், கே.டி ராகவன் பாஜகவின் மகளிர் அணியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் செல்போனில் வீடீயோ காலில் பேசுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன

சட்டையின்றி வீட்டில் கேடி ராகவன் இருந்த நிலையில் ஒரு கட்டத்தில் ஆபாசமான செய்கைகளிலும் ஈடுபடுவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன. வீடியோவை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன், பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலோடு தான் வீடியோவை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவில் அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண்களைப் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்குவதை அம்பலப்படுத்துவதற்காகத் தான் வீடியோ வெளியிடப்பட்டதாக, அதன் தயாரிப்புக் குழுவில் இடம் பெற்றுள்ள வெண்பா கீதாயன் என்பவரும் தெரிவித்துள்ளார். வீடியோவின் இறுதியில், சமீபத்தில் சிறுமியரை பாலியல் வன்புணர்வு செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள சாமியார் சிவசங்கர் பாபா குறித்தும் சில தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த வீடியோ குறித்து நியூஸ் 18 தமிழ்நாடு சார்பில் கே,டி. ராகவனிடம் கேட்ட போது, வீடியோவுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலையைச் சந்தித்து வீடியோ குறித்து விவாதித்ததாகவும் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும் கேடி ராகவன் சமூக வலைதளங்களில் தகவல் வெளியிட்டுள்ளார. இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கட்சியின் சார்பில் விசாரணைக்குழு அமைத்து இதுபோன்ற குற்றச்சாட்டுகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், கே.டி.ராகவனுக்கு எதிராக வீடியோ வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பா ஆகியோர் பா.ஜ.கவிலிருந்து நீக்கப்பட்டனர். அரசியல் விவகாரத்தில் தீவிர ஆர்வம் காட்டும் நடிகை கஸ்தூரியும் இந்த விவகாரம் தொடர்பாக ட்வீட் செய்துள்ளார்.

வழக்கமாக பெண்கள் விவகாரத்தில் பெண்களுக்கு ஆதரவான கருத்துகளை பதிவிடும் கஸ்தூரி இந்த விவகாரத்தில் ராகவனுக்கு எதிரான கருத்துகளைப் பதிவிடாமல் மறைமுகமாக வீடியோ வெளியிட்ட மதன் ரவிச் சந்திரனைச் சாடியுள்ளார். கஸ்தூரியின் ட்விட்டர் பதிவில், ‘கரும்பு தின்ன கூலி என்பது என்னவென்றால்- sting operation மூலம் வாங்கியாச்சு மானம் , அதுக்கு youtube விளம்பர வருமானம் ! #veralevel அடுத்தது யார்? அகப்பட்டவன் மட்டும் அயோக்கியன் போல புகார் குடுக்கும் புனிதர்களுக்கா?’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மற்றொரு ட்வீட்டில், ‘இத்தனை நாளு ஒரு TV debate கூட முழுசா பாக்கல.. இன்னிக்கு சேர்த்து வச்சு எக்கச்சக்கமா பாத்துட்டோம் ! தம்பதி சமேதரா ஒரு interview இப்போ வைரல்... அதுக்கு கமெண்ட்ஸ் தெரிச்சுக்கிட்டு இருக்கு. இந்த கண்ராவியில் சிக்கி பொதுவெளியில் விவாதிக்கப்படும் அப்பாவி பெண்களை நினைத்தால்...’ என்று குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Kasthuri tweet, News On Instagram