காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த கூட்டம்.. காற்றில் பறந்த சமூக இடைவெளி

காசிமேடு

ஞாயிற்றுக்கிழமை என்றாலே திருவிழா போல காட்சியளிக்கும் காசிமேடு மீன் சந்தை

 • Share this:
  டீசல் விலை உயர்வால்  குறைந்த அளவே விசைபடகுகள் கடலுக்கு சென்றதால் சென்னை காசிமேட்டில் மீன் விலை உயர்ந்து காணப்பட்டது.

  மீன் பிடி தடை காலம் 61நாட்கள் நிறைவு பெற்று ஒரு மாதம் ஆகுகிறது. வழக்கமாக தடை காலம் முடிந்தவுடன் மிகுந்த மகிழ்ச்சியாக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்வார்கள். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா அலையில் சிக்கி  மீனவர்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு ஒரு துயரச் சம்பவமாக டீசல் விலை  நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. குறைந்த அளவு விசைப்படகுகள் கடலில் மீன்பிடிக்கச் செல்கின்றது.இதனால் பொதுமக்கள் விரும்பி வாங்கும் பெரிய வகையான பாறை ,சூறை ,வஞ்சிரம், ஏமன் கோலா  உள்ளிட்ட மீன் வகைகள் குறைந்த அளவே வந்துள்ளது இதனால் மீன்கள் விலை கூடுதலாக விற்கப்படுகிறது.

  மேலும் சிறிய வகையான  நெத்திலி தும்பிலி மத்தி, சிறிய வகை வஞ்சிரம்  உள்ளிட்ட மீன்கள் மட்டுமே விலை உயர்த்தி விற்பனை செய்யப்படுகின்றன.ஆனால் பொதுமக்கள் அதிகளவில் விரும்பி வாங்கும் வஞ்சிரம், சங்கரா, பாறை, இறால் போன்ற மீன்களின் வரத்து குறைவாகவே காணப்பட்டது. இதனால் அசைவ பிரியர்கள் ஏமாற்றம் அடைத்தனர்.இதனால் வியாபாரிகளும் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  காசிமேட்டில் வந்து இறங்கிய மீன்களில் தும்பிளி மீன் கூடை ரூ.1000, சங்கரா மீன் கூடை ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம், வஞ்சரம் மீன் கிலோ ரூ.1000 ஆயிரத்திற்கும், இறால் வகை மீன்கள் கிலோரூ.400-ரூ.500 வரை விலை, பாறை வகை கிலோ 500 ரூபாய், நெத்திலி 300-400 விலை சற்று கூடுதலாக விற்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை என்றாலே திருவிழா போல காட்சியளிக்கும் காசிமேடு மீன் சந்தையில் மீன் வாங்க குவிந்த கூட்டத்தினர் சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  செய்தியாளர்: அசோக் குமார்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

   
  Published by:Ramprasath H
  First published: