உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். காசிக்கும் தமிழ்நாட்டிற்குமான ஆன்மிகம் மற்றும் கலாச்சார தொடர்பை வலுப்படுத்தும் வகையில் ஒரு மாதத்திற்கு இவ்விழா நடைபெறவுள்ளது. இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
காசி தமிழ் சங்கமத்திற்காக ராமேஸ்வரத்திலிருந்து சிறப்பு ரயில் மூலம் ஏற்கனவே தமிழர்கள் வாரணாசி சென்றடைந்தனர். இந்நிலையில், கோவையில் இருந்து இன்று காலை சென்ற ரயிலில் கைவினைப் பொருட்கள் தயாரிப்பாளர்கள், விசைத்தறி நெசவாளர்கள் மற்றும் இசை கலைஞர்கள் என 83 பேர் புறப்பட்டனர். அவர்களுக்கு கோவை மாவட்ட பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழ் மொழியின் சிறப்பை பற்றி வட இந்தியர்களுக்கு தெரியப்படுத்தும் முயற்சியாகவே காசி தமிழ் சங்கமம் நடைபெறுவதாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் நமது நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன், இது போன்ற நிகழ்வுகள் அனைத்து மாநிலங்களிலும் தொடர்ந்து நடைபெறவுள்ளதாகவும் கூறினார்.
தமிழகத்தில் ஆன்மிகம் பெரிய அளவில் எழுச்சி பெற்றுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். வாரணாசியில் நமது சிறப்பு செய்தியாளருக்கு பேட்டியளித்த அவர், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி மூலம் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பது அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்று கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Varanasi