ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கரூர் மாணவி தற்கொலை விவகாரம்: காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

கரூர் மாணவி தற்கொலை விவகாரம்: காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

கரூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் காவல் ஆய்வாளர் கண்ணதாசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கரூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் காவல் ஆய்வாளர் கண்ணதாசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கரூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் காவல் ஆய்வாளர் கண்ணதாசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கரூரில் பாலியல் வன்கொடுமை காரணமாக 12ம் வகுப்பு படித்துவந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வன்கொடுமையால் சாகும் கடைசி பெண் தானாக தான் இருக்க வேண்டும் என்று தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மாணவி, தன்னை யார் இந்த முடிவை எடுக்க வைத்தார் என்பதை கூறவே பயமாக உள்ளதாகவும் தெரிவித்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  இதனிடையே, தன் மகளின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவியின் தாயார் வெங்கமேடு காவல் நிலையத்திற்கு, அன்று இரவிலேயே தன்னுடைய உறவினர்களை உடன் அழைத்து சென்றுள்ளார். அப்போது காவல் ஆய்வாளர் கண்ணதாசன், புகார் மனுவை பெறாமல் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்களை தகாத முறையில் பேசியதோடு, உறவினர்களை பூட்ஸ் காலால் உதைத்து அடித்திருக்கிறார்.

  மேலும் சிலரை லாக்கப்பில் தள்ளி அடைத்தும் சரமாரியாக தாக்கியிருக்கிறார். இரவு முழுவதும் அதைத் தொடர்ந்து அடுத்தநாள் காலைவரை விசாரணை என்ற பெயரில் மாணவியின் தாயையும் அவருடன் சென்றவர்களையும் காவல் நிலையத்திலேயே இருக்க வைத்திருக்கிறார். காவல்துறையின் இத்தகைய செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  இதைத்தொடர்ந்து, மாணவியின் கடிதம் மற்றும் டைரி செல்போன் உள்ளிட்டவைகளை வெங்கமேடு போலீஸார் கைப்பற்றி தகவலை சேகரித்து விசாரித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, மாணவி உயிரிழந்தது தொடர்பாக புகார் அளித்தபோதும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி ஆய்வாளர் கண்ணதாசனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி எஸ்.பி.சுந்தரவடிவேல் உத்தரவிட்டிருந்தார்.

  இந்நிலையில், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆய்வாளர் கண்ணதாசனை பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.

  Published by:Esakki Raja
  First published:

  Tags: Karur, Sexual harrasment