கரூரில் விபத்து வழக்கில் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வேலாயுதம்பாளையம் காவல் ஆய்வாளர் வேலுச்சாமி மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர். அதன் எதிரொலியாக அவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த மாதம் 16-ம் தேதி 2 கார்கள் மோதி கொண்ட விபத்தில் ஒரு பெண் உட்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் கடந்த 26-ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் காவல் நிலைய எழுத்தர் செந்தில்குமார், விபத்து ஏற்படுத்திய வாகனத்தை விடுவிக்க 15,000 லஞ்சம் வாங்கியதாக கைது செய்தனர்.
அப்போது காவல் நிலைய ஆய்வாளர் வேலுச்சாமியும் லஞ்சம் கேட்டதாக அளித்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் காவல் ஆய்வாளர் வேலுச்சாமி, எழுத்தர் செந்தில்குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இதன் எதிரொலியாக திருச்சி மாவட்ட டிஐஜி பாலகிருஷ்ணன், காவல் ஆய்வாளர் வேலுச்சாமியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
Also see...
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.