தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இங்கே.. பிரதமர் மோடி எங்கே - ட்விட்டர் ட்ரெண்டிங்-க்கு ஜோதிமணி ரியாக்‌ஷன்

ஜோதிமணி எம்.பி

தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கோ பேக் ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது.

 • Share this:
  தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறையத் தொடங்கியுள்ளது. மாநில அரசானது கொரொனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு ஜூன் 7-ம் தேதி வரை அமலில் உள்ளது. தலைநகர் சென்னை அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர், திருச்சி, மதுரை போன்ற ஊர்களில் கொரோனா தொற்றின் தாக்கம் குறையவில்லை. கோவை மாவட்டத்தில் தினமும் 3,500 க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டு வருகின்றது. கோவை மாவட்டத்தில் 38,000 பேர் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  இந்நிலையில்தான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்று அதிகம் பாதிக்கபட்டுள்ள ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டார். கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் படுக்கை வசதிகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த முதல்வர் மு.கஸ்டாலின், ’PPE கிட் எனப்படும் பாதுகாப்பு கவச அடை அணிந்து கொரோனா சிகிச்சை பிரிவுகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.முதல்வருடன் சுகாதார துறை அதிகாரிகளும் கவச உடை அணிந்து ஆய்வு பணிகளில் ஈடுபட்டனர்.

  இதற்கிடையில் தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கோ பேக் ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது. தேசிய அளவில் ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடித்தது. நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவினருக்கு கொங்கு மண்டலம் அதிர்ச்சி கொடுத்தது. கொங்கு மண்டலத்தில் திமுகவின் வாக்கு சதவிகிதம் சரிந்தது. இந்நிலையில் கொங்கு மண்டலத்துக்கு ஆய்வுக்கு சென்ற சென்ற முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ பேக் ஸ்டாலின் ஹேஷ்டேக் ட்ரெண்டானது. #GoBackStalin 1.31 லட்சம் டிவீட்களுடன் முதலிடத்தை பிடித்தது. பாஜகவினர் பலரும் Go Back Stalin ஹேஷ்டேக்கில் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்வீட் செய்து வருகின்றனர்.

  இதனை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கடுமையாக விமர்சித்துள்ளார். “இந்த நெருக்கடியான கொரொனா தொற்று காலத்தில் உருப்படியாக ஒன்றும் செய்யாமல் GobackStalin என்று ட்ரெண்ட் செய்யும் பிஜேபியினரே. இதோ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இங்கே. பிரதமர் நரேந்திர மோடி எங்கே?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: