ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கரூர் மக்களவைத் தொகுதி

கரூர் மக்களவைத் தொகுதி

கரூர்

கரூர்

வரும் மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் தம்பிதுரை போட்டியிடப் போவதில்லை எனக் கூறப்படுகிறது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  பேருந்து பாகங்கள் தயார் செய்வது மற்றும் ஜவுளி தொழில் செய்யும் மக்கள் அதிகம் உள்ள கரூர் மக்களவைத் தொகுதி 1957-ம் ஆண்டு நடைபெற்ற முதல் மக்களவை தேர்தலில் இருந்தே இயங்கி வருகிறது.

  ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக விளங்கிவந்த கரூர் தொகுதி அதன் பின்னர் அ.தி.மு.க-வின் கோட்டையாக மாறியுள்ளது. காங்கிரஸ் கட்சி 6 முறை வெற்றி பெற்றிருந்தது. பின்னர், அ.தி.மு.க எம்.பி. தம்பிதுரை 1989-ம் ஆண்டு முதன்முறையாக இந்தத் தொகுதியை கைப்பற்றினார்.

  அதன் பின்னர், அ.தி.மு.க-வும் 6 முறை வெற்றி பெற்று கரூர் தொகுதியில் பலமான அடித்தளத்தை அமைத்தது. 2009 மற்றும் 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களிலும் அ.தி.மு.க-வின் தம்பிதுரை அமோக வெற்றி பெற்றார்.

  ஆனால், வரும் மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் தம்பிதுரை போட்டியிடப் போவதில்லை எனக் கூறப்படுகிறது. பா.ஜ.க-வைத் தொடர்ந்து விமர்சித்து வந்த தம்பிதுரை அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி அமைத்துள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் பரவுகின்றன.

  2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 5,40,722 வாக்குகள் பெற்று தம்பிதுரை வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க-வின் சின்னசாமி 3,45,475 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார்.

  தே.மு.தி.க சார்பில் போட்டியிட்ட என்.எஸ். கிருஷ்ணன் 76,560 வாக்குகளும் காங்கிரஸின் ஜோதிமணி 30,459 வாக்குகளும் பெற்று தோல்வியைத் தழுவினர். 2009-ம் ஆண்டில் 81.46% வாக்குகள் பதிவான நிலையில், கடந்த 2014-ம் ஆண்டில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் 80.47% வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது.

  Published by:Rahini M
  First published:

  Tags: Cauvery Delta Lok Sabha Elections 2019, Elections 2019, Karur S22p23, Lok Sabha Election 2019, Tamil Nadu Lok Sabha Elections 2019