கரூர் அரசுப்பள்ளி மாணவர்கள் உருவாக்கிய ‘நீர்’ செயற்கைக்கோள் - அடுத்தவாரம் வானில் ஏவப்படுகிறது

”ஆகஸ்ட் 11-ம் தேதி ஹீலியம் வாயு அடைக்கப்பட்ட பலூன் மூலம் தேர்வான செயற்கைக்கோள்கள், வானில் செலுத்தப்படும். "

news18
Updated: August 6, 2019, 10:37 AM IST
கரூர் அரசுப்பள்ளி மாணவர்கள் உருவாக்கிய ‘நீர்’ செயற்கைக்கோள் - அடுத்தவாரம் வானில் ஏவப்படுகிறது
மாணவர் குழுவுடன் ஆசிரியர்கள் (Image: Special Arrangements)
news18
Updated: August 6, 2019, 10:37 AM IST
நீர்நிலைகளில் ஆக்கிரமித்துள்ள கருவேல மரத்தை அழிக்கும் நோக்கத்தோடு கரூர் அரசுப்பள்ளி மாணவர்கள் உருவாக்கியுள்ள நீர் என்ற பெயரிலான செயற்கைக்கோள், அடுத்தவாரம் வானில் செலுத்தபடுகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி தந்தை என போற்றப்படும் விக்ரம் சாராபாயின் 100-வது பிறந்தநாளை கொண்டாடும் நோக்கில் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம், விக்ரம் சாராபாய் விண்வெளி சவால் என்ற போட்டியை அறிவித்திருந்தது. அதன்படி பள்ளி மாணவர்கள் தயாரிக்கும் 30 கிராம் எடை கொண்ட சிறிய செயற்கைக்கோளை விண்ணில் ஏவ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்காக தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சிறந்த பங்களிப்பு ஆற்றிய 12 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு, சென்னை சிறுச்சேரியில் வரும் 11-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளன. இதில் கரூர் மாவட்டம் வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களும் பங்கேற்க தேர்வாகி உள்ளனர்.


அப்பள்ளியின் அறிவியல் ஆசிரியர் தனபாலின் வழிகாட்டுதலின் பேரில் 5 பேர் கொண்ட மாணவ குழுவினர் 30 கிராம் எடையில் நீர் செயற்கைக்கோள்-30 என்ற சாதனத்தை உருவாக்கியுள்ளனர். இது நிலத்தடி நீரை உறிஞ்சும் கருவேல மரத்தை பூமியிலிருந்து முற்றிலும் அழிக்கும் நோக்கில் வடிவமைத்துள்ளனர்.

கருவேல மரத்தின் பல்வேறு பாகங்களில் இருந்து சாறு எடுத்து, உலர வைத்து படிகங்களாக மாற்றி 3.5 செ.மீ. கனசதுரம் கொண்ட நீர் செயற்கைக்கோள் மூலம் விண்ணில் செலுத்தப்படும் எனவும், வானில் உள்ள ஈரப்பதம், வெப்பநிலை வேறுபாடு காரணமாக படிகங்களில் ஏற்படும் டி.என்.ஏ. மாறுபாடுகள் மூலம் இத்தாவரத்தை அழிக்கும் சாத்தியக்கூறுகளை ஆராய உள்ளதாக அம்மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

11-ம் தேதி ஹீலியம் வாயு அடைக்கப்பட்ட பலூன் மூலம் தேர்வான செயற்கைக்கோள்கள், வானில் செலுத்தப்படும். இலக்கை அடைந்ததும் பலூன் வெடித்து, உள்ளே இருக்கும் செயற்கைக்கோள் பூமியை படம் எடுத்தபடியே பாராசூட் மூலம் தரையிறங்கும். தரையில் இருக்கும் கட்டுப்பாட்டு அறை மூலம் செயற்கைக்கோளில் இருந்து தகவல்களை பெறலாம்.

Loading...

First published: August 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...