Home /News /tamil-nadu /

Senthil Balaji | அமைச்சர் செந்தில்பாலாஜி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகள் கைது

Senthil Balaji | அமைச்சர் செந்தில்பாலாஜி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகள் கைது

விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டம்

விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்க கூடாது என்பதை வலியுறுத்தி மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை  10 முறை சந்தித்தோம். காது கொடுத்து கூட கேட்கவில்லை. விடியல் அரசு என்று கூறிவந்த அரசு தற்போது விடியாத அரசாக உள்ளது என விவசாயிகள் குற்றம் சாட்டினார்.

மேலும் படிக்கவும் ...
    உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி கரூர் சட்டமன்ற உறுப்பினரும், மின்சாரத் துறை அமைச்சருமான செந்தில்பாலாஜி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற 100-க்கு மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

    தமிழகத்தில் திருப்பூர், கரூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்க கூடாது எனக் கூறி கடந்த 5 ஆண்டுகளாக விவசாய சங்கத்தினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் ஆதரவு தெரிவித்து அறிக்கை விட்டதோடு, சட்டமன்றத்திலும் பேசியுள்ளார்.

    மேலும், திமுக தேர்தல் அறிக்கையிலும் இது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டிருந்தார். திமுக அரசு அமைந்தவுடன் இது தொடர்பாக மின்சாரத் துறை அமைச்சரிடம் பல முறை மனு அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி கரூர், திருப்பூர், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட 10 மாவட்டங்களை சேர்ந்த விவசாய அமைப்புகளை சார்ந்த விவசாயிகள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கரூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகமான மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அலுவலகம் முன்பு உண்ணாவிரதத்துடன் கூடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருந்தனர்.

    இன்று காலை முதல் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வெவ்வேறு மாவட்டத்தில் இருந்து வந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேருந்து நிலையம் அருகில் ஒன்று திரண்ட அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக செல்ல முயன்று கோஷங்களை எழுப்பினர். அதன் பிறகு அமைச்சரின் அலுவலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

    இதையும் படிங்க: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி போலி கால்செண்டர்: சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை!


    இதுகுறித்து விவசாய சங்க கொள்கை பரப்பு செயலாளர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அப்போதைய எடப்பாடி பழனிசாமி அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை செவிசாய்க்காமல் மின்கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். ஐந்து ஆண்டுகளில் போராட்டத்தில்  ஈடுபட்ட விவசாயிகள் மீது 40-க்கு மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்து விவசாயிகள் சிறைக்கும் செல்லப்படும்  நிலை ஏற்பட்டது.



    அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளிடம் குறை கேட்டு தான் தீர்மானம் நிறைவேற்றும் என்று கூறி வந்தார்.
    சொல்வதை தான் செய்வோம். செய்வதை தான் சொல்வோம் என கூறிய திமுகவினர், தேர்தல் அறிக்கையிலும் கூட அதேதான் கூறி ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளிடம் கூறி வாக்கு சேகரித்தார்.

    மேலும் படிக்க: கோவையில் மாயாமான 10-ம் வகுப்பு மாணவி சடலமாக மீட்பு


    தற்போது ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த உடன் விவசாயிகளின் இன்னல்களுக்கு இதுவரை செவி சாய்க்கவில்லை.துறை சார்ந்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை  10 முறை சந்தித்தோம். காது கொடுத்து கூட கேட்கவில்லை.
    விடியல் அரசு என்று கூறிவந்த அரசு தற்போது விடியாத அரசாக உள்ளது என விவசாயிகள் குற்றம் சாட்டினார்.  கோரிக்கை நிறைவேறும் வரை கரூரிலிருந்து போராடுவோம் எனவும் தெரிவித்தனர்.

    செய்தியாளர்:  கார்த்திகேயன்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Farmers, Senthil Balaji

    அடுத்த செய்தி