’நீங்களே சரி செய்துகொள்ளுங்கள் என தெரிவிக்கிறார்கள்'.. மின் வாரியத்தினரின் அலட்சியத்தால் அவதியுறும் விவசாயிகள்..

மின் கம்பங்கள் சேதம் அடைந்து அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக புகார் தெரிவித்த விவசாயிகளிடம், மின் கம்பங்கள் சேதமடைந்தால் அருகில் உள்ளவர்கள் பணம் வசூல் செய்து நீங்களே சரி செய்து கொள்ள வேண்டும் என மின் வாரியத்தினர் தெரிவிப்பதாக கரூர் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

’நீங்களே சரி செய்துகொள்ளுங்கள் என தெரிவிக்கிறார்கள்'.. மின் வாரியத்தினரின் அலட்சியத்தால் அவதியுறும் விவசாயிகள்..
மின் கம்பங்கள் (கரூர் மாவட்டம் )
  • Share this:
கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள மின் கம்பங்கள் சேதம் அடைந்து அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் விவசாயப் பணிகள் பாதிப்படைந்து தண்ணீரின்றி பயிர்கள் கருகி வருவதாகவும், மாணவர்களின் ஆன்லைன் வகுப்பும் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கரூர் மாவட்டத்தில் கரும்பு, வாழை, வெற்றிலை, நெல் என பல லட்சம் ஏக்கருக்கு மேல் முதன்மையான விவசாயமாக சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு பகுதியில் காவிரி தண்ணீர் மூலமும், ஒரு பகுதியில் கிணறு மற்றும் போர்வெல் மூலமாக தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் குறிப்பாக கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாயனூர், சங்கரமலப்பட்டி, சித்தலவாய், லாலாபேட்டை, மகிளிப்பட்டி, பிள்ளப்பாளையம், மகாதானபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் கம்பங்கள் காரைகள் பெயர்ந்து மின்கம்பங்கள் சேதமடைந்தும், உடைந்து காணப்படுகிறது.
இதனால் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதுடன் விபத்துகளும் ஏற்படுகிறது. தற்போது ஒரு போக சாகுபடியாக சம்பா சாகுபடி பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் பாதிப்படைந்து வருகின்றனர்.

மேலும் நடவு செய்த நெற்பயிர்கள் தண்ணீரின்றி  காய்ந்து கருகி வருகிறது. மின்கம்பங்கள் அதிகமாக சேதமடைந்து உள்ளதால் லேசான காற்று அடித்தாலோ அல்லது மழை பெய்தாலோ உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.

விவசாய பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு எந்த நேரத்தில் மின்சாரம் வரும் என தெரியாத நிலையில் கண் விழித்து கொண்டு மின்சாரம் வரும் நேரம் பார்த்து விவசாய பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், மேலும் மின் கம்பங்கள் சேதம் அடைந்தால் அருகில் உள்ளவர்கள் பணம் வசூல் செய்து நீங்களே சரி செய்து கொள்ள வேண்டும் என மின் வாரியத்தினர் தெரிவிப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் மின்கம்பங்கள் உடைந்து தாழ்வாக வீடுகள் இருக்கும் பகுதிகள் மற்றும் விவசாய இடங்களில் செல்வதால் விபத்து ஏற்படுகிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சேதமடைந்துள்ள மின்கம்பங்கள், மின் கம்பிகளை சரிசெய்து சீராக மின்சாரம் வழங்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
தற்போது கொரோனா ஊரடங்கால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்பு எடுப்பதால் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆன்லைன் வகுப்புகளும் பாதிக்கப்படுவதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
First published: October 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading