ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

காதலியை அடித்துக்கொன்ற வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை - நீதிமன்றம் தீர்ப்பு

காதலியை அடித்துக்கொன்ற வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை - நீதிமன்றம் தீர்ப்பு

கரூர்

கரூர்

கல்லூரி மாணவியை கட்டையால் அடித்துக் கொன்ற மாணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  கரூரில் கல்லூரிக்குள் நுழைந்து மாணவியை கட்டையால் அடித்துக் கொன்ற மாணவருக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

  ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி  ஆதியனேந்தலை சேர்ந்தவர் பெரியசாமி மகன் உதயகுமார் (28). இவர் கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் படித்த மதுரை சேர்ந்த சோனாலி (21) என்ற மாணவியை காதலித்து வந்துள்ளார். உதயகுமார் கல்லூரிக்கு சரிவர வராததால் கல்லூரி நிர்வாகம் அவரை தேர்வெழுத அனுமதிக்காததால் சோனாலி உதயகுமாருடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.

  Also Read:  மனைவியின் ஆவி.. நள்ளிரவில் சுடுகாட்டில் கதறல் - இளைஞர் தற்கொலையால் கிராம மக்கள் அதிர்ச்சி

  கடந்த 2016ம் வருடம் ஆகஸ்ட் 30ம் தேதி கல்லூரி சீருடையில் உருட்டுக் கட்டையுடன் கல்லூரியில் உள்ள சோனாலி வகுப்பறைக்கு நுழைந்த உதயகுமார் அவரை உருட்டுக்கட்டையால் கடுமையாக தாக்கினார். தடுக்க வந்த பேராசிரியர் சதீஷ்குமாரை தாக்கி, மிரட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டார். இதையடுத்து மாணவியை கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்கு மதுரை அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார்.

  கரூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து உதயகுமாரை கைது செய்தனர். இவ்வழக்கில் கரூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமா பானு இன்று  அளித்த தீர்ப்பில், கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக 10 ஆண்டு, ரூ.10,000 அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாத சிறை, ஆபாசமாக திட்டியதற்காக 3 மாத சிறை, ரூ.1,000 அபராதம் கட்டத் தவறினால் மேலும் 15 நாள் சிறை, கட்டையால் தாக்கியதற்காக 2 ஆண்டு சிறை, ரூ.1,000 அபராதம், கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் சிறைத் தண்டணை விதிக்கப்பட்டது.

  Also Read: நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்.. டீசலுக்கு 1,30,000 பணத்தை வாங்கி ஏமாற்றிய கப்பல் மாலுமி – அதிர்ந்த மீனவர்கள்

  கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனை, ரூ.10,000 அபராதம் கட்டத்தவறினால் மேலும் 3 மாத சிறை, கொலை மிரட்டல் விடுத்ததற்காக 2 ஆண்டு சிறை, ரூ.1,000 அபராதம் கட்டத்தவறினால் மேலம் 3 மாத சிறைத்தண்டனை எனவும் இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். அபராதத்தொகை ரூ.23,000 மாணவியின் தாயாருக்கு இழப்பீடாக வழங்கவும், பெண்ணின் தாயாருக்கு இழப்பீடு வழங்க இலவச சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் அரசுக்கு பரிந்துரை செய்யவும் உத்தரவிட்டார்.

  செய்தியாளர் : தி.கார்த்திகேயன், (கரூர்)

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Crime News, Death, Girl Murder, Karur, Love, Love issue