கரூர் மாநகரில் இரு சக்கர வாகனத்தில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக உணவு கடத்தல் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து அவர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கும் இடமளிக்கும் வகையில் சென்ற இரு சக்கரவாகனத்தை பின் தொடர்ந்து சென்றனர்.
இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் முத்து நகர் பகுதியில் ஜவுளி துணி உற்பத்தி செய்யும் நிறுவன பெயர் பலகை மாட்டப்பட்டுள்ள கடைக்குள் இரு சக்கர வாகனத்தில் அரிசி மூட்டைகளை கொண்டு சென்றுள்ளார்.
அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற பறக்கும் படையினர் அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ரேசன் கடைகளில் விற்பனை செய்யப்படும் அரிசிகளை கடத்திக் கொண்டு வந்து வாகனங்களில் வெளியூர்களுக்கு அனுப்பி வைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளதாக கூறப்படுக்கிறது.
Also Read: கூலிப்படையை ஏவி தந்தையை கொலை செய்த வளர்ப்பு மகள் - மதுரையில் பரபரப்பு
இதனையடுத்து அங்கு 63 மூட்டைகளில் சுமார் ஒன்றரை டன் ரேசன் அரிசிகளை பறிமுதல் செய்ததுடன், அந்த கடத்தலில் ஈடுபட்ட மணிகண்டன் என்ற இளைஞரை உணவு கடத்தல் பிரிவு போலீசார் கைது சென்றனர். வட்டார வழங்கல் அலுவலர் மகேந்திரன், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் செந்தில் குமார் கொண்ட பறக்கும் படையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
செய்தியாளர் தி.கார்த்திகேயன், (கரூர்) இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.