முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தூக்கில் தொங்கிய காதல் மனைவி.. சடலத்தை இறக்கி வைத்து மதுபோதையில் தூங்கிய கணவன்

தூக்கில் தொங்கிய காதல் மனைவி.. சடலத்தை இறக்கி வைத்து மதுபோதையில் தூங்கிய கணவன்

குடிபோதையில் கணவர்

குடிபோதையில் கணவர்

வேலூரில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு மனைவியை பார்ப்பதற்காக மாயனூர் வரும்போதே நன்றாக குடித்துவிட்டு வந்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

காதல் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்தது கூட தெரியாமல் மதுபோதையில் கணவன் தூங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரை சேர்ந்தவர் தனசேகர். இவர் வேலூர் மாவட்டத்தில் உள்ள குடிபோதை மறுவாழ்வு மையத்தில் மேலாளராக இருக்கிறார். தனசேகர் மாயானூர் பகுதியைச் சேர்ந்த மாலதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கிறார். தனசேகர் வேலூரில் பணியாற்றி வந்ததால் மாலதி மாயனூரில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

Also Read:  குடும்பத் தகராறில் விபரீத முடிவு எடுத்த பெண் - குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை

இந்நிலையில் வேலூரில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு மனைவியை பார்ப்பதற்காக மாயனூர் வந்துள்ளார். மாயனூர் வரும்போதே நன்றாக குடித்துவிட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி தனசேகருடன் சண்டைப்போட்டுள்ளார்.

அதன்பின்னர் இரவு இருவரும் தூக்கச் சென்றுவிட்டனர். கணவன் மீது ஆத்திரத்தில் இருந்த மாலதி நள்ளிரவில் எழுந்து மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். அம்மாவை காணாமல் தேடிய சிறுவன் மாலதி தூக்கில் தொங்குவதை கண்டு கூச்சலிட்டுள்ளான். மதுபோதையில் இருந்த தனசேகரனை எழுப்பியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிறுவனின் கூச்சல் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்துள்ளனர். மதுபோதையில் இருந்த தனசேகரன் மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கிய மனைவியை கீழே இறக்கி வைத்துவிட்டு மதுபோதையில் தூங்கியுள்ளார்.

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் மாலதியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Commit suicide, Crime | குற்றச் செய்திகள், Husband Wife, Karur, Woman