• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கரூரில் 3 பெண் குழந்தைகளுடன் விதவைப் பெண் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை

கரூரில் 3 பெண் குழந்தைகளுடன் விதவைப் பெண் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை

மகள்களுடன் செல்வராணி

மகள்களுடன் செல்வராணி

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.

  • Share this:
    கரூரில் சாலையோரத்தில் நின்றிருந்தவர் மீது வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்த கரும்பு ஜீஸ் கடை தொழிலாளி - தமிழக அரசு நிதி உதவியும், வேலை வாய்ப்பு வழங்க வேண்டி விதவைப்பெண் 3 பெண் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை.

    கரூரை அடுத்த தாந்தோணிமலை அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராணி. இவரது கணவர் மாணிக்கம் கரூர் - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் சின்னமநாயக்கன்பட்டி பிரிவில் கரும்பு ஜூஸ் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். கடந்த செப்டம்பர் 19ம் தேதி தனது கடை முன்பு நின்று கொண்டிருந்தபோது சாலையில் அதிவேகமாக வந்த இரண்டு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    இந்நிலையில் தாங்கள் குடியிருந்த வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியாத நிலையில் வீட்டை காலி செய்துவிட்டு செல்வராணி தனது மூன்று பெண் குழந்தைகளுடன் உறவினர் வீட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.

    வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் நிலையில், இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரிடம், தமிழக அரசு நிதியுதவியும், வேலைவாய்ப்பும், குடியிருக்க வீடு இல்லாத நிலையில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டுமென கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.

    Must Read : கிராமத்தை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்ட அருந்ததியர் சமூக மக்கள் : காரணம் இதுதான்

    மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

    செய்தியாளர் - தி.கார்த்திகேயன், கரூர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: