செக் மோசடி வழக்கில் குளித்தலை திமுக எம்எல்ஏ மாணிக்கத்திற்கு பிடிவாரண்ட். கரூர் விரைவு நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராசம்மாள் என்பவரிடம் ரூ 10 லட்சத்திற்கு செக் கொடுத்த எம்எல்ஏ மாணிக்கம் பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக 09-03-21ல் வழக்குப் பதிவு (வழக்கு எண் 519/2021) செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக 18.10.21, 02.12.21, 24.01.21, என 3 முறை சம்மன் அனுப்பப்பட்டும் அவர் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகவில்லை.
இந்த நிலையில் 4- வது முறையாக நேற்றும் ( 23-02-22 தேதி) ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நேற்றும் அவர் ஆஜர் ஆகாததால் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கத்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கரூர் விரைவு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
குளித்ததலை திமுக எம்எல்ஏ மாணிக்கத்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்த சம்பவம் கரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், சமீபத்தில் வெளியான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் கரூர் மாவட்டத்தில் திமுக முழுமையாக ஸ்வீப் செய்துள்ளது. இதனை திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில் திமுக எம்.எல்.ஏவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருப்பது திமுகவினரிடையே கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
செய்தியாளர்: தி.கார்த்திகேயன், கரூர். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.