கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியின் முன்னாள் அதிமுக எம்எல்ஏ ( தற்போது திமுகவில் இணைந்து உள்ளவருமான) எஸ்.காமராஜ், மீது ரூ10 லட்சம் செக் மோசடி வழக்கில் பிடிவாரண்டு பிறப்பித்து கரூர் விரைவு நீதிமன்ற நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக கட்சி சார்பில் மீண்டும் சீட் கொடுக்காததினால் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவாகவும், கரூர் மாவட்ட ஜெ பேரவை செயலாளருமான எஸ்.காமராஜ், திமுகவில் இணைந்தார்.
இவர் கரூர் ஆண்டான்கோயில் அம்பாள் நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரிடம் கடந்த 20.01.20 ல் எம்.எல்.ஏ காமராஜ், அவசர செலவிற்காக ரூ 10 லட்சம் பணம் கடனாக பெற்றுள்ளனர். சரியாக வட்டி செலுத்தாமலும், கடன்தொகையை திருப்பி செலுத்தாத காரணத்தால் முன்னாள் எம்எல்ஏ காமராஜ் மீது ராமசந்திரன் செக் மோசடி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த கரூர் விரைவு நீதிமன்ற நீதிபதி சரவணபாபு, முன்னாள் எம்எல்ஏ காமராஜருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.
தி.கார்த்திகேயன்,செய்தியாளர்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.