நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கரூர் மாவட்டம் பழைய ஜெயங்கொண்டம் சோழபுரம் வார்ட்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளார்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் ஒட்டுமொத்தமாக 12,838 உறுப்பினர்களை தேர்வுசெய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை 19-ம்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 60.7 சதவீத வாக்குகள் பதிவாகின. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
கரூர் மாவட்டம் பழைய ஜெயங்கொண்டம் சோழபுரம் பேரூராட்சில் 3-வது வார்டில் தி.மு.க சார்பில் சுரேஷ், பாஜக சார்பில் கோபிநாத், அதிமுக சார்பில் தர்மலிங்கம், அமமுக சார்பில் ராமசாமி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் பாஜக வேட்பாளர் கோபிநாத் 174 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். ஆளுங்கட்சியான தி.மு.கவை சேர்ந்த வேட்பாளர் 173 வாக்குகள் பெற்றார்.
ஒரு ஓட்டு வித்தியாசத்தில் பாஜகவின் கோபிநாத் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளருக்கு 5 வாக்குகளும், அமமுக வேட்பாளர் 51 வாக்குகளும் பெற்றார். ஒரு ஓட்டு வித்தியாசத்தில் ஆளும்கட்சி எதிர்க் கட்சியை தோற்கடித்து பா.ஜ.க வேட்பாளர் வெற்றிப்பெற்றுள்ளார்.
செய்தியாளர்: கார்த்திகேயன் (கரூர்)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.