கொரோனாவிலிருந்து மீண்டவர்களை கண்காணிக்க தனி வார்டு: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தல்

கோப்புப் படம்

  கடந்த ஆட்சியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு புரதம் நிறைந்த உணவு வழங்கப்பட்டதாகவும் அதேபோல் இப்போதும் நல்ல தரமான உணவு அரசு வழங்கிட வேண்டும் என்று விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

 • Share this:
  கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களை கண்காணிக்கும் வகையில் மாவட்ட தலைநகர் மருத்துவமனைகளில் தனி வார்டு உடனே தொடங்க வேண்டும் என முன்னாள்  சுகாதாரத் துறை அமைச்சர் விஜபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

  புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்து சிவிபி அறக்கட்டளை சார்பில் காது கேளாதவர்களுக்கு செவித்திறன் மிஷின்களை விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான விஜயபாஸ்கர் வழங்கினார்.

  இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கர், தமிழகத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அரசு இன்னும் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். என்று அறிவுறுத்தினார்.  கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டாலும் கூட கறுப்பு புஞ்சை, மாரடைப்பு, நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட பல பாதிப்புகளை சந்திக்கும் நிலையும், உயிரிழக்கின்ற பரிதாபமும் அதிகரித்து கொண்டே தான் இருப்பதாக வேதனை தெரிவித்த அவர், தமிழகத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளதாக குறிப்பிட்டார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

  எனவே, அந்தந்த மாவட்ட தலைநகர் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களை கண்காணிக்க தனி வார்டை தமிழக அரசு உடனே தொடங்கிட வேண்டும் என்று விஜயபாஸ்கர் வலியுறுத்தினார்.

  மேலும்,  கடந்த ஆட்சியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு புரதம் நிறைந்த உணவு வழங்கப்பட்டதாகவும் அதேபோல் இப்போதும் நல்ல தரமான உணவு அரசு வழங்கிட வேண்டும் என்றும் அவர்  கூறினார்.

  மேலும் படிக்க.. கல்வி கட்டணம்- தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை..
  Published by:Murugesh M
  First published: