Home /News /tamil-nadu /

பேரூராட்சி தலைவர் பதவி திமுக தட்டிப் பறித்ததாக புகார்... இந்திய கம்யூ. கட்சியினர் போராட்டம்

பேரூராட்சி தலைவர் பதவி திமுக தட்டிப் பறித்ததாக புகார்... இந்திய கம்யூ. கட்சியினர் போராட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு கூட்டணி தர்மத்தை காக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு கூட்டணி தர்மத்தை காக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு கூட்டணி தர்மத்தை காக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த பேரூராட்சி தலைவர் பதவியை திமுக தட்டி பறித்து வெற்றி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் கரூரில் பரபரப்பு காணப்பட்டது.

கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சி தலைவர் பதவி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில்,  திடீர் திருப்பமாக திமுக உறுப்பினர் புவனேஸ்வரி என்பவர் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில், 13 வார்டுகள் திமுக கூட்டணியும், ஒரு வார்டு பிஜேபியும், ஒரு வார்டு சுயேட்சையும் வெற்றிபெற்றது.
இந்த நிலையில் புலியூர் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு  திமுக-வின் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

புலியூர் பேரூராட்சியில் சிபிஐ சார்பில் 1-வது வார்டில் வெற்றி பெற்ற ஒரே உறுப்பினர் கலாராணிக்கு பேரூராட்சி தலைவராக அறிவித்து கட்சி தலைமை அறிவித்து இருந்தது.

இதையும் படிங்க - கோவில்பட்டி அருகே ஒரே பேரூராட்சியில் மனைவி தலைவராகவும், கணவர் துணை தலைவராகவும் தேர்வு!

இந்த நிலையில் இன்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் இவர் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவருக்கு திமுக உறுப்பினர்கள் முன்மொழிவது போல், திமுகவினர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதில் இவர் பெயர் இல்லாமல் 3வது வார்டு திமுக கவுன்சிலர் புவனேஸ்வரி பெயரை முன்மொழிந்தனர்.
இதனால், 3-வது வார்டு உறுப்பினர் புவனேஸ்வரி தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத தால் திமுக உறுப்பினர் புவனேஸ்வரி புலியூர் பேரூராட்சி தலைவராக போட்டியின்று தேர்வு செய்யப்பட்டுள்ளார் என புலியூர் பேரூராட்சி செயல் அலுவலர் அறிவித்தார்.

இதையும் படிங்க - கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக பதவியேற்றார் கல்பனா... மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவேன் என உறுதி

கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் திமுகவை சேர்ந்தவர் வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற்றதாக அறிவித்ததால் அப்பகுதியில் கூச்சல் குழப்பம் நிலவியது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் புலியூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் தரப்பில் தலைவர் பதவிக்கு அறிவிக்கப்பட்டிருந்த கலாராணி கூறுகையில், கூட்டணி கட்சி தலைவர்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு பேரூராட்சித் தலைவர் பதவியை ஒதுக்கினர். ஆனால் கரூர் மாவட்டம் திமுகவினர், குறிப்பாக புலியூர் பேரூர் கழக திமுக செயலாளர் அம்மையப்பன் கூட்டணி தர்மத்தை மதிக்காமல் எங்களையும், எங்கள் கட்சியையும் அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்தி உள்ளார். ஆகையால் தமிழக முதல்வரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அவர்களும் சரியான நடவடிக்கை எடுத்து கூட்டணி தர்மத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

செய்தியாளர் தி. கார்த்திகேயன், கரூர்

 
Published by:Musthak
First published:

Tags: Local Body Election 2022

அடுத்த செய்தி