• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • குண்டும், குழியுமான சாலைக்கு சுங்க கட்டணம் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிருப்தி!

குண்டும், குழியுமான சாலைக்கு சுங்க கட்டணம் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிருப்தி!

மணவாசி சுங்கச்சாவடி

மணவாசி சுங்கச்சாவடி

நாளுக்குநாள் டீசல் விலை உயர்வின் காரணமாக சரக்கு வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று முதல் சுங்கச்சாவடியில் சுங்கவரி உயர்த்தப்பட்டது அவர்களுக்கு கூடுதல் சுமை ஆகியுள்ளது.

  • Share this:
    கரூர் மாவட்டத்தில்  குண்டும் குழியுமாக உள்ள சாலைக்கு சுங்கவரி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு வாகனன் ஓட்டிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.  சுங்கக் கட்டண உயர்வு காரணமாக வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக சரக்கு வாகன ஓட்டிகள்தெரிவிக்கின்றனர்.

    தமிழகத்தில் 6,606 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றில் 5,134 கி.மீ., சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நேரடியாக பராமரித்து வருகிறது. மீதமுள்ள 1,472 கி.மீ., சாலைகள் மத்திய அரசின் நிதியில், மாநில நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிப்பதற்காக, 49 இடங்களில் சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன.

    இந்நிலையில், மாநிலத்தில் உள்ள 24 சுங்கச்சாவடிகளிலும் நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி 21 சுங்க சாவடிகளில் 5% முதல் 10% வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் 24 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    கரூர் மாவட்டத்தில் கரூர் டூ திருச்சி செல்லும் சாலையில் மணவாசி பகுதியில் ஒரு சுங்கச்சாவடியும், கரூர் டூ திண்டுக்கல் செல்லும் சாலையில் வேலம்செட்டியூர் பகுதியில் ஒரு சுங்கச்சாவடியும்  செயல்பட்டு வருகின்றன.  இங்கு ஏற்கனவே வசூலிக்கப்பட்ட தொகையிலிருந்து கூடுதலாக இன்று முதல் ரூ.5 முதல் 10 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: திருவள்ளுவரை காவியும் ஆக்க வேண்டாம் கருப்பும் ஆக்க வேண்டாம்: கிருஷ்ணசாமி


    கொரனோ ஊரடங்கு தளர்வை தொடர்ந்து தற்போதுதான் சரக்கு வாகனங்கள் அதிகளவில் போக்குவரத்தை தொடங்கியுள்ளன. மேலும்,  நாளுக்குநாள் டீசல் விலை உயர்வின் காரணமாக சரக்கு வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று முதல் சுங்கச்சாவடியில் சுங்கவரி உயர்த்தப்பட்டது மேலும் அவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் விதமாகவும், இதனால் வாடிக்கையாளரிடம் கூடுதலாக வசூலிக்க கூடிய நிலை ஏற்படும் எனவும் வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    மேலும் படிக்க: யாருக்கெல்லாம் திருமண உதவி திட்டத்தில் நிதியுதவி கிடைக்காது?


    குறிப்பாக கரூர் டூ திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்  உள்ள மணவாசி சுங்கச்சாவடி பராமரிப்பில் உள்ள சாலைகள் மிகவும் மோசமாக குண்டும் குழியுமாகவும், தார்கள் பெயர்ந்தும், சாலைகளில் கற்கள் பெயர்ந்து வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்து வருகிறது. சீரமைக்காத  குண்டும் குழியுமாக உள்ள சாலைக்கு கூடுதல் சுங்க கட்டணம் வசூலிப்பதற்கு வாகன ஓட்டிகள் கண்டனம் தெரிவித்தனர். உடனடியாக உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்பப் பெறவேண்டும் என்றும்  டீசல் விலையை  குறைக்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செய்தியாளர்: கார்த்திகேயன் 

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: