Tamil Nadu Assembly Election Results 2021: கரூரில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு...
Tamil Nadu Assembly Election Results 2021: கரூரில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு...
கருர் வாக்கு எண்ணிக்கை மையம்
கரூரில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்பு மற்றும் வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றி 1000 மீட்டர் நீளத்திற்கு தகரம் வைத்து அடைக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், தளவாபாளையம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரியில், கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி) என மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வருகிற 2ம் தேதி நடக்க இருக்கின்ற வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கல்லூரியை சுற்றிலும் 3 அடுக்கு பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாக்கு எண்ணிக்கை மையம், மின்னணு வாக்குப் பதிவுகள் வைக்கப்பட்டுள்ள அறை ஆகியவை சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகில் இந்த வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கல்லூரி அமைந்துள்ளதால் ஏராளமான அரசியல் கட்சி தொண்டர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றிலும் நின்று தேர்தல் நிலவரம் அறிந்து கொள்ள கூடுவார்கள்.
இதைத் தவிர்க்க கல்லூரியின் முன்பகுதி மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் மிக நீளமான 15 அடி உயரம் உள்ள தகரங்கள் கொண்டு சுமார் 1,000 மீட்டர் நீளத்திற்கு அடைக்கப்படும் பணி நடைபெற்று வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பார்த்தால் அந்தக் கல்லூரி முழுவதுமாக வாக்கு எண்ணிக்கை மையம் இருப்பதே தெரியாததுபோல் தகரங்களை கொண்டு அடைக்கப்பட்டு வருகின்றனர்.
செய்தியாளர்: தி.கார்த்திகேயன், கரூர்
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.